பொறியியல் கலந்தாய்வு இன்று துவக்கம்!! அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு!!
இந்த ஆண்டிற்கான பொறியியல் படிப்பிற்கு தமிழகத்தில் மொத்தம் 430 பொறியியல் கல்லூரிகளில் ஒரு லட்சத்து 57 ஆயிரத்து 378 சீட்கள் உள்ளது. இந்த சீட்கள் கலந்தாய்வு நடத்தி பூர்த்தி செய்யப்பட உள்ளது.
எனவே, கலந்தாய்வு தேதி குறித்த அட்டவணை கடந்த ஜூலை 13 ஆம் தேதி அன்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்களால் அன்று காலை பதினொரு மணி அளவில் வெளியிடப்பட்டது.
அந்த அட்டவணையின் படி கலந்தாய்வானது இன்று தொடங்குகிறது. இதில், முதலாவதாக மாற்றுத்தினாளிகள், முன்னாள் ஓய்வு பெற்ற வீரர்களின் குழந்தைகள் மற்றும் விளையாட்டில் இருக்கின்ற மாணவர்கள் ஆகியோருக்கு நடைபெற இருக்கிறது.
இதில், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 % ஒதுக்கீட்டில் விண்ணப்பித்து இருக்கும் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு நடைபெற இருக்கிறது. இந்த ,மாணவர்களுக்கு முன்னாள் படைவீரர்களின் பிரிவில் மொத்தம் பதினொரு இடங்களும், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் மொத்தம் 579 இடங்களும் இருக்கும் பட்சத்தில்,
தற்போது இதற்கு 261 மாணவர்கள் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான கலந்தாய்வு இன்று காலை பத்து மணிக்கு துவங்கி மாலை ஏழு மணிவரை நடைபெற இருக்கிறது.
இதில், மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான கல்லூரிகளை தேர்வு செய்யலாம். இதனையடுத்து இதற்கான ஒதுக்கீட்டு ஆணை அறிவிக்கப்பட்டு அதனை நாளை மதியம் மூன்று மணிக்குள் உறுதி செய்யுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
உறுதி செய்த பிறகு அவர்களுக்கான இறுதி ஒதுக்கீட்டு ஆணை நாளை மாலை ஆறு மணிக்கு வெளியிடப்பட இருக்கிறது. அடுத்ததாக ஜூலை 28 ஆம் தேதி தொடங்கி மூன்று கட்டமாக கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. அந்த வகையில், ஜூலை 28 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 9 ஆம் தேதி வரை பொது கலந்தாய்வும், ஆக்ஸ்ட் 9 முதல் 28 வரை இரண்டாம் சுற்றுக்கான கலந்தாய்வும் நடைபெறும் என்று அறிவிப்பு வந்துள்ளது.
எனவே, அவர்களுக்கான நாட்களில் மாணவர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு கல்லூரிகளை செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.