80 வயதிலும் மூட்டு வலியை துரத்தி அடிக்கும் மேஜிக் பால்!

0
367
#image_title

80 வயதிலும் மூட்டு வலியை துரத்தி அடிக்கும் மேஜிக் பால்!

நமது தாத்தா பாட்டிக்கு இருக்கும் உடல் வலிமை கூட இன்றைய இளம் வயதினருக்கு இல்லை. எலும்புக்கு வலு இல்லாமல் சிறு வயதிலேயே மூட்டு வலி, முதுகு வலி போன்ற பாதிப்புகளை சந்திக்க நேரிடுகிறது. இதற்கு முக்கிய காரணம் ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கம். உடல் எலும்புகளுக்கு போதிய வலு கிடைக்க ஊட்டச்சத்து நிறைந்த பொருட்களை கொண்டு பானம் தயாரித்து குடித்து வந்தால் தீர்வு கிடைக்கும்.

தேவையான பொருட்கள்:-

1)கோதுமை
2)வேர்க்கடலை
3)ராகி
4)கம்பு
5)பால்
6)நாட்டு சர்க்கரை

செய்முறை:-

ஒரு கிண்ணத்தில் 2 ஸ்பூன் கோதுமை, 2 ஸ்பூன் வேர்க்கடலை, 1 ஸ்பூன் ராகி, 1 ஸ்பூன் கம்பு போட்டு தண்ணீர் ஊற்றி 8 மணி நேரம் ஊற விடவும்.

இவை அனைத்தும் தண்ணீரில் நன்கு ஊறி வந்ததும் தண்ணீரை வடிகட்டி விட்டு ஒரு காட்டன் துணியில் இந்த பொருட்களை போட்டு மூட்டை கட்டிக் கொள்ளவும்.

பிறகு இதை ஒரு நாள் வைத்திருந்து மறுநாள் முளைப்பு வந்த உடன் எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்துக் கொள்ளவும்.

இதை ஒரு கிண்ணத்திற்கு வடிகட்டி கொள்ளவும். பிறகு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் ஒரு கிளாஸ் பால் ஊற்றி கொதிக்க விடவும்.

பால் சூடானதும் அரைத்த கலவையை ஊற்றி கொதிக்க விடவும். பச்சை வாடை நீங்கியதும் சுவைக்காக நாட்டு சர்க்கரை போட்டு கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.

இதை ஒரு கிண்ணத்திற்கு ஊற்றி குடிக்கவும். இந்த பானம் மூட்டு தேய்மானம், மூட்டு வலி வீக்கத்தை முழுவதுமாக குணமாக்கும்.

Previous articleநெஞ்சில் பல நாள் தேங்கி கிடக்கும் சளியை கரைத்து வெளியேற்ற உதவும் கசாயம்!
Next articleஇது தெரியுமா? சதகுப்பையை நீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்து வந்தால் உடலில் நடக்கும் அதிசயம்!