90 வயதிலும் ஊசி நூல் கோர்க்கும் அளவிற்கு கண் பார்வை தெளிவாக இருக்கும்.. இவ்வாறு செய்தால்!
கண்… உலகில் வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் மிக முக்கிய உறுப்பு. பார்வை இல்லாமல் போனால் வாழ்க்கை கடினமாகி விடும். கண்ணில் தூசு, பூச்சி பட்டாலே ஒரு வித இடையூறு இருக்கும். சிறிது நேரம் கண்கள் கலங்கிப் போய்விடும். அப்படி இருக்க பார்வையை இழந்தால் வாழ்நாள் முழுவதும் கலங்கி நிற்க வேண்டியது தான்.
கண்ணை பொன் போல் பார்த்துக் கொள்ள வேண்டும். பார்வையை தெளிவாக்கும் உணவுகளை சிறு வயதில் இருந்து சாப்பிட்டு வந்தால் வயதான பின்னர் கண் தொடர்பான பிரச்சனை ஏற்படாது.
காலையில் எழுந்ததும் குளிர்ந்த நீரால் கண்களை கழுவ வேண்டும். கண்ணில் ஏதேனும் தூசு, பூச்சி பட்டால் கண்களை அழுத்தி தேய்க்கக் கூடாது.
கண்களை பாதிக்கும் எந்த ஒரு செயலையும் செய்யக் கூடாது. அதிக நேரம் மின்னனு சாதனங்களை பயன்படுத்தினால் கண்ணில் நீர் வடிதல், கண் எரிச்சல், கண் வலி, கண் கூசுதல், பார்வை குறைபாடு உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளும் ஏற்படும்.
கண் பார்வையை தெளிவாக்கும்… சித்த வைத்தியம்….
*நெல்லிக்காய்
*பட்டை
*இஞ்சி
*தேன்
*உப்பு
நெல்லிக்காய் கண் பார்வையை தெளிவாக்கும் பொருள். நெல்லிக்காயுடன் மேலும் சில பொருட்களை பயன்படுத்தினால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.
மிக்ஸி ஜாரில் 1 நெல்லிக்காயின் துண்டுகளை போட்டுக் கொள்ளவும். அடுத்து அதில் 1 துண்டு பட்டை, 1 துண்டு இஞ்சி மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அரைக்கவும்.
இதை ஒரு கிளாஸுக்கு மாற்றி சிட்டிகை உப்பு மற்றும் தேவையான அளவு தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.