80 வயதானாலும் மூட்டு வலி வரவே வராது.. இதை செய்தால்!

Photo of author

By Divya

80 வயதானாலும் மூட்டு வலி வரவே வராது.. இதை செய்தால்!

வயது முதுமை ஆனால் ஏற்படும் மூட்டு வலி தற்பொழுது ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால் இளம் வயதினரும் சந்தித்து வரும் ஒரு பாதிப்பாக மாறிவிட்டது. இந்த மூட்டு வலி பாதிப்பு எந்த செலவும் இன்றி குணமாக கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வைத்தியத்தை ட்ரை செய்து பார்க்கவும்.

தீர்வு 01:-

தேவையான பொருட்கள்:-

*வெந்தயம்
*மிளகு
*சீரகம்

செய்முறை…

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். அடுத்து அதில் 1 தேக்கரண்டி வெந்தயம், 1/4 தேக்கரண்டி மிளகு, 1/2 தேக்கரண்டி சீரகம் கொதிக்க வைக்கவும்.

பின்னர் அடுப்பை அணைத்து இதை ஒரு கிளாஸுக்கு வடிகட்டி காலை, மாலை என இருவேளை குடிக்கவும்.

தீர்வு 02:-

தேவையான பொருட்கள்:-

*பச்சைக் கற்பூரம்
*பிரண்டை
*பூண்டு
*தேங்காய் எண்ணெய்

செய்முறை…

முதலில் தேவையான அளவு பிரண்டை எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். பின்னர் 5 பல் பூண்டை தொல் நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும்.

அடுப்பில் ஒரு வாணலி வைத்து அதில் 100 மில்லி தேங்காய் எண்ணெய் ஊற்றவும். அடுத்து நறுக்கி வைத்துள்ள பிரண்டை, தோல் நீக்கிய பூண்டு சேர்த்து மிதமான தீயில் காய்ச்சிக் கொள்ளவும்.

பின்னர் அதில் 1 துண்டு பச்சைக் கற்பூரம் சேர்த்து கொதிக்க வைத்து அடுப்பை அணைத்து ஆற விடவும்.

இதை பாட்டிலில் ஊற்றி சேமித்துக் கொள்ளவும். தினமும் இரவு நேரத்தில் இந்த எண்ணெய்யை தடவி மூட்டுகளில் வலி இருக்கும் இடத்தில் தடவி வந்தால் அவை குணமாகும்.