மறந்தும் கூட கர்ப்பிணி பெண்கள் இந்த உணவுகளை சாப்பிடக்கூடாது!

0
333
#image_title

மறந்தும் கூட கர்ப்பிணி பெண்கள் இந்த உணவுகளை சாப்பிடக்கூடாது!

கர்ப்பிணி பெண்கள் மறந்தும் கூட சாப்பிடக் கூடாத உணவுகள் உள்ளது. அந்த உணவுகள் என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

கர்ப்பிணி பெண்கள் அனைவரும் தங்களுக்கு விருப்பமான உணவுகளை சாப்பிட வேண்டும் என்று நினைப்பார்கள். அவ்வாறு பல வகையான உணவு வகைகளை கடைகளில் இருந்து வாங்கியோ அல்லது வீடுகளில் தயார் செய்தோ உண்பது பழக்கம்.

இந்த பழக்கத்தினால் அவர்களுக்கும் அவர்களின் வயிற்றில் வளரும் குழந்தைகளுக்கும் அதிக பாதிப்புகள் உள்ளது என்பது பற்றி அவர்களுக்கு தெரிவது இல்லை. அவ்வாறு கர்ப்பிணிப் பெண்கள் மறந்தும் கூட சாப்பிடக் கூடாத உணவுகள் பற்றியும் அதன் பாதிப்புகள் பற்றியும் பார்க்கலாம்.

கர்ப்பிணிப் பெண்கள் மறந்தும் கூட சாப்பிடக் கூடாத உணவுகள்…

* கர்ப்பிணிப் பெண்கள் சாப்ட் டிரிங்க்ஸ், காபி, டீ போன்றவற்றை தவிர்க்க வேண்டும். ஏன் என்றால் இதில் கெஃபைன் என்ற என்ற வேதிப்பொருள் உள்ளது. இது குழந்தையை பாதிக்கக் கூடும்.

* பாலை காய்ச்சாமல் எந்த ஒரு பாடலையும் தயார் செய்து சாப்பிடக் கூடாது. அதாவது ஐஸ்கிரீம், ஸ்மூத்தி, மில்ஷேக் போன்றவற்றை காய்ச்சாத பாலைக் கொண்டு வீட்டிலேயே தயார் செய்து சாப்பிடலாம். அவ்வாறு காய்ச்சி பாலை கொண்டு தயார் செய்யப்படும் பொருட்களை நாம் சாப்பிடும் பொழுது பாக்டீரியா பாதிப்புகள் ஏற்படும். இந்த பாதிப்புகளை தவிர்க்க கர்ப்பிணிப் பெண்கள் காய்ச்சாத பாலைக் கொண்டு தயார் செய்யப்படும் உணவுகளை சாப்பிடக்கூடாது.

* ஒரு சில பெண்களுக்கு பச்சை முட்டை சாப்பிடும் பழக்கம் இருக்கும். ஆனால் கரு தரித்து விட்டால் பச்சை முட்டையை சாப்பிடும் பழக்கத்தை அப்படியே விட்டு விட வேண்டும். சமைக்கப்படாத முட்டையில் சால்மெணெல்லா என்ற ஒரு வகையான கிருமிகள் உள்ளது. இது வாந்தி, குமட்டல், வயிற்றுப் போக்கு போன்ற வயிறு சார்ந்த பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே கர்ப்பிணிப் பெண்கள் பச்சை முட்டையை சாப்பிடக்கூடாது.

* வீட்டில் மீதமுள்ள உணவுகளை சூடு செய்தோ அல்லது பிரிட்ஜில் வைத்தோ சூடு. செய்து சாப்பிடக் கூடாது. மேலும் உணவு தயாரித்து நான்கு மணி நேரம் கழிந்த உணவுகளை கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிடக்கூடாது.

Previous articleடிகிரி முடித்தவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!!
Next articleஉடல் எடையை வேகமாக குறைக்க வேண்டுமா? இதோ இந்த தேன் பூண்டு சாப்பிடுங்க!!