மலச்சிக்கல் பிரச்சனை சரியாக 13 சித்த வைத்திய குறிப்புகள்..!!

Photo of author

By Divya

மலச்சிக்கல் பிரச்சனை சரியாக 13 சித்த வைத்திய குறிப்புகள்..!!

1)அகத்தி கீரையை வாரம் ஒருநாள் உணவில் சேர்த்து வந்தால் மலச்சிக்கல் பாதிப்பு சரியாகும்.

2)பப்பாளி பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கி மூலம் கட்டுப்படும்.

3)20 கிராம் பார்லி அரிசி, 40 கிராம் புளிய இலையை கசாயம் காய்ச்சி குடித்தால் மலச்சிக்கல் பிரச்சனை அகலும்.

4)அடிக்கடி முளைக்கீரையை சமைத்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை முடிவுக்கு வரும்.

5)15 மில்லி மாதுளை பூ சாறுடன் சிறிதளவு கற்கண்டு சேர்த்து தினமும் 3 வேளை சாப்பிட்டு வந்தால் அடிக்கடி மலம் கழிக்கும் உணர்ச்சி நீங்கும்.

6)சாறு வேளை செடிப்பொடி மற்றும் சுக்குத்தூள் கலந்து சாப்பிட்டு வந்தால் குடலில் தேங்கி கிடக்கும் மலம் முழுவதும் வெளியேறும்.

7)இரவு தூங்கச் செல்வதற்கு முன் 1 மாதுளம் பழம் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பாதிப்பு நீங்கும்.

8)தினமும் 5 மில்லி முள்ளங்கி சாறு குடித்து வந்தால் மலக்கட்டு தீரும்.

9)வயிற்றில் வெந்நீர் ஒத்தடம் கொடுத்தால் மலச்சிக்கல் அகலும்.

10)நார்த்தங்காய் ஊறுகாய் சாப்பிட்டு வந்தால் ஜீரணசக்தி மேம்படும். இதனால் மலச்சிக்கல் பாதிப்பு ஏற்படாது.

11)பாதாளமூலி சதையை சிறு துண்டுகளாக நறுக்கி மிளகுத் தூள் சேர்த்து சாப்பிட்டால் மலம் கழிக்கும் உணர்வு நீங்கும்.

12)10 மில்லி விளக்கெண்ணெயில் 3 துளி எருக்க இலை சாறு கலந்து சாப்பிட்டால் இறுகி போன மலம் இளகி வெளியேறும்.

13)மகழவித்து பருப்பை பொடி செய்து 5 கிராம் அளவு எடுத்து பாலில் கலந்து சாப்பிட்டு வர மலக்கட்டு நஞ்சு நீங்கும்.