சமரவிக்ரமாவின் சிறப்பான ஆட்டம்!!! நடப்பு உலகக் கோப்பை தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்த இலங்கை!!!

0
26
#image_title

சமரவிக்ரமாவின் சிறப்பான ஆட்டம்!!! நடப்பு உலகக் கோப்பை தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்த இலங்கை!!!

இலங்கை அணியின் பேட்ஸ்மேன் சமரவிக்ரமாவின் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்து 91 ரன்கள் சேர்த்தால் இலங்கை அணி உலகக் கோப்பை தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்து உள்ளது.

நேற்று(அக்டோபர்21) நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் முதல் லீக் சுற்றில் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்த இலங்கை அணியும் தென்னாப்பிரிக்காவில் வீழ்த்திய மகிழ்ச்சியில் நெதர்லாந்து அணியும் மோதியது. இதில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதையடுத்து முதலில் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி 91 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் இணைந்த சைபெர்ட் எங்கெல்பிரச்ட், வான் பீக் ஜோடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இவர்கள் இருவரும் நெதர்லாந்து அணியை 91 ரன்களில் இருந்து 221 ரன்களுக்கு கொண்டு வந்தனர்.

இதையடுத்து நெதர்லாந்து அணி 49.4 ஓவர்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 262 ரன்கள் சேர்த்தது. நெதர்லாந்து அணியில் அதிகபட்சமாக சைபெர்ட் எங்கெல்பிரச்ட் அவர்கள் அரைசதம் அடித்து 70 ரன்களும் வான் பீக் அரைசதம் அடித்து 59 ரன்களும் சேர்த்தனர். இலங்கை அணியில் பந்துவீச்சில் சிறப்பாக பந்துவீசிய தில்சன் மதுசங்கா மற்றும் ரஜிதா இருவரும் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதையடுத்து 263 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய இலங்கை அணி தொடங்கிய வீரர் குசால் பிரேரா 5 ரன்களுக்கும், குசால் மென்டிஸ் 11 ரன்களுக்கும் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளிக்க மற்றொரு தொடங்கிய வீரர் பதும் நிசங்காவுடன் இணைந்த சமரவிக்ரமா ரன்களை குவிக்க தொடங்கினார்.

சிறப்பாக விளையாடிய நிசங்கா அரைசதம் அடித்து 54 ரன்களுக்கு ஆட்டமிழக்க தொடர்ந்து விளையாடிய சமரவிக்ரமா அரைசதம் அடித்தார். அவருடன் இணைந்த மற்றொரு வீரர் சரித் அசலன்கா 44 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தனஞ்செய டிசில்வா 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த சமரவிக்ரமா 91 ரன்கள் சேர்த்து இலங்கை அணியின் வெற்றிக்கு உதவினார்.

இதனால் இலங்கை அணி 5 விக்கெட்டுகளை இழந்த இலங்கை அணி 48.4 ஓவர்களில் 263 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலமாக தொடர் தோல்விகள் மூலமாக துவண்டு இருந்த இலங்கை அணி உலகக் கோப்பை தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.