முதுகில் தாங்க முடியாத வலி உள்ளதா? அப்போ இந்த எண்ணெயை தயார் செய்து தடவி வாருங்கள்!

0
239
#image_title

முதுகில் தாங்க முடியாத வலி உள்ளதா? அப்போ இந்த எண்ணெயை தயார் செய்து தடவி வாருங்கள்!

முதுகு பகுதியில் அடிபட்டாலோ, தொடர்ந்து ஒரே இடத்தில் அமர்ந்து இருந்தாலோ முதுகில் ஒருவித வலி ஏற்படும். இந்த வலி ஏற்பட்டால் குனிந்து, நிமிர மிகவும் கடினமாக இருக்கும். எந்த ஒரு வேலையும் அவ்வளவு எளிதில் செய்ய முடியாது.

இந்த முதுகு வலி அனைவருக்கும் ஏற்படக் கூடிய ஒன்று தான் என்று அலட்சியம் காட்டாமல் எவ்வாறு குணப்படுத்திக் கொள்ளலாம் என்று யோசியுங்கள். ஆரம்பத்தில் குணப்படுத்த தவறினாலும் தாமதம் செய்யாமல் இப்பொழுதாவது அதற்கு என்ன அதை குணப்படுத்த முயற்சி செய்யுங்கள்.

முதுகு வலியை குணப்படுத்த பல வழிகள் இருந்தாலும் அதை சரி செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றினால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.

முதுகு வலி – இதை குணமாக்க தேவைப்படும் பொருட்கள்…

கடுகு எண்ணெய்
கறிவேப்பிலை
பூண்டு

எண்ணெய் தயாரிக்கும் முறை…

2 பல் பூண்டை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். அடுத்து 1 கொத்து கறிவேப்பிலை தேவைப்படும்.

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 100 மில்லி கடுகு எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
பின்னர் நறுக்கி வைத்துள்ள பூண்டு பற்களை போட்டு பொரிய விடவும். பின்னர் 1 கொத்து கறிவேப்பிலை சேர்த்து எண்ணெய் நிறம் மாறி வரும் வரை காய்ச்சிக் கொள்ளவும்.

இந்த எண்ணெய் வெதுவெதுப்பான சூட்டில் இருக்கும் பொழுது முதுகில் தடவி 5 நிமிடம் மஜாஜ் கொடுக்கவும். இவ்வாறு காலை, மாலை என இரு நேரத்திலும் தடவி வந்தால் முதுகில் ஏற்பட்ட வலி முழுவதும் நீங்கி விடும்.