இரண்டு நிமிடத்தில் வீட்டில் உள்ள அனைத்து பல்லிகளும் தெறித்தோட இந்த வழியை பாலோ செய்து பாருங்கள்!!

Photo of author

By Divya

இரண்டு நிமிடத்தில் வீட்டில் உள்ள அனைத்து பல்லிகளும் தெறித்தோட இந்த வழியை பாலோ செய்து பாருங்கள்!!

நம்மில் பெரும்பாலானோருக்கு பல்லி என்றால் அருவருப்பு கலந்த பயம் இருக்கும்.இந்த பல்லிகள் வீட்டில் எல்லா இடங்களிலும் டேரா போட்டு உட்கார்ந்து இருக்கிறது.

முக்கியமாக சமையலறையில் தான் பல்லி ராஜ்ஜியமே இருக்கிறது.அதனால் நீங்கள் மிகுந்த எச்சரிக்கையுடன்ஏ இருப்பது அவசியம்.

இந்த பல்லிகள் வீடுகளில் பொருட்கள் அதிகம் நகர்த்தப்படாத இடங்களில் தான் அதிகம் வசிக்கிறது.இந்த பல்லி தொல்லையில் இருந்து விடுபட ரசாயனம் கலந்த ஸ்ப்ரேயர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.இதனை காட்டிலும் வீட்டில் உள்ள சில பொருட்களை மட்டும் பயன்படுத்தி பல்லி தொல்லையில் இருந்து நிரந்தரமாக சுதந்திரம் பெற்று விடலாம்.இந்த முறையினால் நமக்கு எந்தஒரு பக்க விளைவுகளும் ஏற்படாது.

தேவையான பொருட்கள்:-

*டெட்டால் – 1 மூடி ;அளவு

*சின்ன வெங்காயம் – 6

*தனி மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டி

*டிஸ்ஸு பேப்பர் – 1

*தண்ணீர் – 1 1/2 டம்ளர்

செய்முறை:-

முதலில் 5 அல்லது 6 சின்ன வெங்காயத்தின் தோலை நீக்கி கொள்ளவும்.பின்னர் அதை ஒரு உரலில் போட்டு நன்கு இடித்துக் கொள்ளவும்.பின்னர் இதன் சாற்றை ஒரு பவுலுக்கு பிழிந்து கொள்ளவும்.

அடுத்து அதில் 1 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.பிறகு அதில் 1 மூடி டெட்டால் ஊற்றி நன்கு கலந்து கொள்ளவும்.பின்னர் கலந்து வைத்துள்ள கலவையில் 1 டம்ளர் அளவு எடுத்து ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றிக் கொள்ளவும்.

அடுத்து மீதமுள்ள டெட்டால் கலவையில் 1/2 தேக்கரண்டி மிளகாய் தூள் சேர்த்து கலந்து கொள்ளவும்.பின்னர் ஒரு டிஸ்ஸு பேப்பர் மடக்கி அதில் ஊற போடவும்.பிறகு இந்த டிஸ்ஸு பேப்ரை சின்ன பவுலில் போட்டு பல்லி நடமாட்டம் இருக்கும் இடத்தில் வைக்கவும்.

அதேபோல் ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி வைத்துள்ள கலவையை பல்லி நடமாட்டம் இருக்கும் இடத்தில் தெளித்து கொள்ளவும்.இவ்வாறு செய்வதன் மூலம் வீட்டில் மறைந்து இருந்த பல்லிகள் அனைத்தும் உடனடியாக வீட்டை விட்டு வெளியேறி விடும்.