ஆண்மையை அதிகரிக்க ஆண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள்!

Photo of author

By Divya

ஆண்மையை அதிகரிக்க ஆண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள்!

Divya

ஆண்மையை அதிகரிக்க ஆண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள்!

நவீன காலத்தில் ஆண்மை குறைபாடு, மலட்டு தன்மை உள்ளிட்ட பல பாதிப்புகளை ஆண்கள் சந்தித்து வர முக்கிய காரணம் மோசமான உணவுமுறை பழக்கம்.

*முருங்கை பூ

முருங்கை மரத்தில் இருந்து கிடைக்க கூடிய அனைத்து பொருட்களுமே சத்துக்கள் நிறைந்தவை. அதிலும் முருங்கை பூ ஆண்களுக்கு விந்தணு உற்பத்தி அதிகரித்து மலட்டு தன்மையை போக்கச் செய்கிறது. இந்த பூவை பொரியல் அல்லது ஜூஸ் செய்து சாப்பிட்டு வந்தால் நிச்சயம் உரியத் தீர்வு கிடைக்கும்.

அதேபோல் முருங்கை கீரையை சுத்தம் செய்து பசு நெயில் போட்டு வதக்கி தொடர்ந்து 48 நாட்களுக்கு சாப்பிட்டு வர ஆண்மை தொடர்பான அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.

*செவ்வாழை பழம்

தினமும் ஒரு செவ்வாழை பழத்தை தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை அதிகரிக்கும்.

*பாதாம் பருப்பு

பாதாம் விந்தணு உற்பத்திக்கு சிறந்த பலன் கொடுக்கும். இதை ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் விந்தணு உற்பத்தி அதிகரிக்கும்.

*முருங்கை விதை

முருங்கை விதையை உலர்த்தி பொடியாக்கி பாலில் கலந்து குடித்தால் மலட்டு தன்மை நீங்கும்.