மலச்சிக்கல் பாதிப்பு 1/2 மணி நேரத்தில் சரியாக இதை ஒரு ஸ்பூன் சாப்பிடுங்கள்..!!
நம்மில் பெரும்பாலானோருக்கு மிகப்பெரிய பாதிப்பாக மலசிக்கல் இருக்கிறது. தினந்தோறும் காலை கடனை தவறாமல் முடித்து விட வேண்டும். இல்லையென்றால் அவை மலச்சிக்கலாக மாற அதிக வாய்ப்பு இருக்கிறது. மலம் வரும் உணர்வு ஏற்பட்டால் அவற்றை அடக்கி வைக்காமல் உடனடியாக வெளியேற்றி விடுங்கள். ஒருவேளை அவற்றை அடக்கி வைக்கும் பட்சத்தில் பிறகு அவற்றை கழிக்கும் பொழுது நமக்கு மிகுந்த வலி ஏற்பட்டு அவை மிகவும் உலர்ந்து வெளியேறும்.
மலச்சிக்கல் ஏற்பட காரணம்:-
*எளிதில் செரிமானம் ஆகாத உணவு
*மன அழுத்தம்
*தேவையான நீர் பருகாமல் இருத்தல்
*நார்ச்சத்து மற்றும் நீர்சத்து குறைபாடு
*உடல் சோர்வு
*உடல் நலக் கோளாறு
தேவையான பொருட்கள்:-
*வெந்தயம்
*வெள்ளை சர்க்கரை
*விளக்கெண்ணெய்
செய்முறை…
அடுப்பில் ஒரு வாணலி வைத்து அதில் 1 தேக்கரண்டி வெந்தயத்தை சேர்த்து வறுத்துக் வறுத்துக் கொள்ளவும். பின்னர் இதை ஆறவிட்டு ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடித்துக் கொள்ளவும்.
அடுத்து கிண்ணத்தில் பொடித்து வைத்துள்ள வெந்தயத்தை சேர்க்கவும். பிறகு 1 தேக்கரண்டி வெள்ளை சர்க்கரை மற்றும் 1 தேக்கரண்டி விளக்கெண்ணெய் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து வெறும் வயிற்றில் சாப்பிடவும்.
இவ்வாறு செய்வதன் மூலம் நாள்பட்ட மலக் கழிவுகள் முழுமையாக வெளியேறி குடல் ஆரோக்கியமாக இருக்கும்.
மற்றொரு தீர்வு:-
தேவையான பொருள்:-
*சோம்பு
செய்முறை..
ஒரு கிண்ணத்தில் 1 தேக்கரண்டி சோம்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 3 முதல் 4 மணி நேரம் ஊற விடவும்.
பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் ஊறவைத்துள்ள சோம்பு தண்ணீரை ஊற்றி மிதமான தீயில் நன்கு கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.
பின்னர் இதை ஒரு கிளாஸுக்கு வடிகட்டி பருகவும். இதை காலையில் வெறும் வயிற்றில் தான் பருக வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் நாள்பட்ட மலக் கழிவுகள் முழுமையாக வெளியேறி குடல் ஆரோக்கியமாக இருக்கும்.