அடிக்கடி சுள்ளுனு தலை வலிக்கிறதா? அப்போ இந்த இலையை வெந்நீரில் போட்டு ஆவி பிடியுங்கள்!!
அதிகப்படியான தலைவலி ஏற்படும் பொழுது அதை குணமாக்க மருந்து மாத்திரை இல்லாத எளிய தீர்வை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:-
1)துளசி
2)கற்பூரவல்லி
3)தண்ணீர்
செய்முறை:-
அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் 2 கற்பூரவல்லி இலை,சிறிது துளசி இலை போட்டு கொதிக்க விடவும்.
இந்த நீரை ஆவி பிடித்தால் ஒற்றை தலைவலி,தலைபாரம்,அடிக்கடி தலையில் சூள் என்று ஏற்படும் வலி அனைத்தும் குணமாகும்.
தேவையான பொருட்கள்:-
1)தண்ணீர்
2)விக்ஸ் வேப்பரப்
செய்முறை:-
அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.5 நிமிடங்களுக்கு சூடாக்கி அடுப்பை அணைக்கவும்.
இந்த நீரில் ஓரு ஸ்பூன் விக்ஸ் வேப்பரப் போட்டு கலக்கி ஆவி பிடித்தால் ஒற்றை தலைவலி,தலைபாரம்,அடிக்கடி தலையில் சூள் என்று ஏற்படும் வலி அனைத்தும் குணமாகும்.
தேவையான பொருட்கள்:-
1)கொத்தமல்லி
2)இஞ்சி
3)நாட்டு சர்க்கரை
4)துளசி
5)தண்ணீர்
செய்முறை:-
அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 1 1/4 கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் 2 தேக்கரண்டி கொத்தமல்லி விதை,ஒரு துண்டு இடித்த இஞ்சி போட்டு மிதமான தீயில் கொதிக்க விடவும்.
அதன் பின்னர் சிறிது துளசி மற்றும் நாட்டு சர்க்கரை சேர்த்து கொதிக்க விட்டு அடுப்பை அணைத்து விடவும்.இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி குடித்தால் தலைவலி விடும்.