குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை.. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இதை காலையில் 1 கிளாஸ் பருகுங்கள்!!

0
30
#image_title

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை.. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இதை காலையில் 1 கிளாஸ் பருகுங்கள்!!

நம் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி என்பது மிக மிக அவசியமான ஒன்று. ஆனால் நவீன கலா வாழ்க்கை முறை மற்றும் உணவு முறை மாற்றத்தால் நாம் எடுத்துக் கொள்ள கூடிய உணவுகள் சுவையாக இருக்கிறதே தவிர அதில் ஆரோக்கியம் என்பது பூஜ்ஜியம் தான்.

உடல் ஆரோக்கியமாக இருக்க போதுமான அளவு நோய் எதிர்ப்பு சக்தி நம் உடலில் இருக்க வேண்டும். அதற்காக நாம் தினமும் ஆரோக்கியமாக உணவை எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். தினமும் ஆரோக்கியம் நிறைந்த உணவு கிடைக்குமா என்றால் சந்தேகம் தான். எனவே ஊட்டச்சத்து நிறைந்த சில நட்ஸ், தானிய வகைகளை வறுத்து பொடி செய்து பாலில் கலந்து பருகி வந்தோம் என்றால் உடலுக்கு தேவையான எதிர்ப்பு சக்தி எளிதில் கிடைத்து விடும்.

தேவையான பொருட்கள்:

*பாதாம் பருப்பு – 50 கிராம்

*முந்திரி பருப்பு – 50 கிராம்

*கோகோ பவுடர்- 3 தேக்கரண்டி

*வால்நட் – 10

*ராகி மாவு – 3 தேக்கரண்டி

*நாட்டுச்சர்க்கரை- தேவையான அளவு

செய்முறை…

அடுப்பில் ஒரு வாணலி வைத்து அதில் 50 கிராம் பாதாம், 50 கிராம் முந்திரி, 10 வால்நட் ஆகியவற்றை தனித்தனியாக வறுத்து ஒரு தட்டிற்கு மாற்றிக் கொள்ளவும்.

பின்னர் வாணலியில் 3 தேக்கரண்டி ராகி மாவு சேர்த்து மிதமான தீயில் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

பின்னர் ஆற வைத்துள்ள பருப்பு வகைகளை மிக்சி ஜாரில் போட்டு நன்கு பொடித்துக் கொள்ளவும். இதை ஒரு பவுலுக்கு மாற்றி ஆற விடவும். பின்னர் வறுத்த ராகி மாவு மற்றும் கோகோ பவுடர் சேர்த்து கலந்து கொள்ளவும். பின்னர் இனிப்பு சுவைக்காக நாட்டுச்சர்க்கரை சேர்த்து கலந்து காற்று புகா டப்பாவில் கொட்டி சேமித்து கொள்ளவும். இதனை ஃப்ரிட்ஜில் வைத்து 6 மாதம் வரை பயன்படுத்தலாம்.

ஊட்டச்சத்து மிக்க பானம் தயாரிக்கும் முறை…

தேவையான பொருட்கள்:-

*பால்

*தயாரித்து வைத்துள்ள பவுடர்

செய்முறை…

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 1 கிளாஸ் பால் ஊற்றி மிதமான தீயில் கொதிக்க விடவும். பின்னர் இதை ஒரு டம்ளருக்கு வடிகட்டி தயார் செய்து வைத்துள்ள ஊட்டச்சத்து பவுடரை அதில் போட்டு கலந்து பருகவும்.