அஜீரணக் கோளாறு முதல் வாயுத் தொல்லை வரை 5 வித பிரச்சனைக்கு இவை ஒன்று தான் தீர்வு!!

0
48
#image_title

அஜீரணக் கோளாறு முதல் வாயுத் தொல்லை வரை 5 வித பிரச்சனைக்கு இவை ஒன்று தான் தீர்வு!!

இன்றைய கால வாழ்க்கை சூழலில் நாம் எடுத்துக் கொள்ளும் உணவு ஆரோக்கியமானதா என்றால் அதற்கு பதில் கேள்விக் குறி தான். அதிக எண்ணெய் பயன்படுத்தி சமைத்த உணவு, பொரித்த, வறுத்த உணவுகளை தான் நாம் ருசிக்க ஆசைப்படுகிறோம். இதனால் என்ன மாதிரியான பின் விளைவுகளை நாம் சந்திக்க போகிறோம் என்ற கவலை நம்மிடம் இல்லாததால் தான் இளம் வயதில் பல வித நோய் பாதிப்புகளுக்கு ஆளாகி விடுகிறோம்.

உணவு நம் உடலுக்கு முக்கியமான ஒன்று. அது ஆரோக்கியமாக இருப்பது மிகவும் முக்கியம். இல்லையென்றால் வாயுத் தொல்லை, செரிமானக் கோளாறு, வயிற்றுப் போக்கு, மலச்சிக்கல், வயிறு உப்பசம் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளை நாம் சந்திக்க நேரிடும்.

இது போன்ற பாதிப்புகள் நமக்கு ஏற்படாமல் இருக்கவும், ஒருவேளை இந்த பாதிப்புகளால் அவதிப்படும் பட்சத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கத்தை கடைபிடிக்கவும். இவ்வாறு செய்வதன் மூலம் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.

தேவையான பொருட்கள்:-

பொடிக்க:-

துவரம் பருப்பு – 1 தேக்கரண்டி

மிளகு – 1 தேக்கரண்டி

சீரகம் – 1 தேக்கரண்டி

ரசம் வைக்க:-

*புளித்தண்ணீர் – 1 கப்

*மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி

*பெருங்காயத்தூள் – 2 சிட்டிகை

*கொத்தமல்லித் தழை – சிறிதளவு

*உப்பு – தேவையான அளவு

தாளிக்க:-

*நெய் – 1 தேக்கரண்டி

*வெந்தயம் – 1/4 தேக்கரண்டி

*கடுகு – 1/2 தேக்கரண்டி

*ஓமம் – 1/4 தேக்கரண்டி

*சீரகம் – 1 தேக்கரண்டி

*பூண்டு – 4 பல்

*கறிவேப்பிலை – 1 கொத்து

செய்முறை…

மிக்ஸி ஜாரில் மிளகு, சீரகம் மற்றும் துவரம் பருப்பு ஆகிய அனைத்தையும் பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.

அடுத்து அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் புளிக் கரைசல், ஒரு கப் தண்ணீர், உப்பு, பெருங்காயத்தூள், மஞ்சள் தூள் மற்றும் கொஞ்சம் தண்ணீரும் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும். பிறகு அரைத்து வைத்துள்ள மிளகு + சீரகம் + துவரம் பருப்பு பொடியை அதில் கலந்து விடவும்.

மற்றொரு அடுப்பில் ஒரு தாளிப்பு கரண்டி வைத்து அதில் நெய் சிறிதளவு ஊற்றவும். அவை சூடானதும் கடுகு, வெந்தயம், ஓமம், சீரகம், கறிவேப்பிலை சேர்த்து பொரிய விடவும்.

பின்னர் அதில் இடித்து வைத்த பூண்டை சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுத்து கொதித்துக் கொண்டிருக்கும் ரசத்தில் சேர்த்து கிளறி விடவும். பின்னர் வாசனைக்காக சிறிதளவு கொத்தமல்லி தழையை சேர்த்து ரசத்தை இறக்கவும்.