செரிமானக் கோளாறு முதல் வாயுத் தொல்லை வரை.. அனைத்தையும் சரி செய்ய உதவும் இந்த ஒரு பானம்!!

Photo of author

By Divya

செரிமானக் கோளாறு முதல் வாயுத் தொல்லை வரை.. அனைத்தையும் சரி செய்ய உதவும் இந்த ஒரு பானம்!!

உடல் ஆரோக்கயமாக இருக்க வேண்டும் என்றால் நாம் உண்ணும் உணவு செரிக்கப்பட்டு தேவையில்லா கழிவுகள் மலம், சிறுநீர் வழியாக வெளியேற்பட வேண்டும். ஆனால் நம்மில் பலர் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தாமல் வாய் ருசிக்காக ஆரோக்கியமற்ற உணவுகளை உண்டு வருவதால் செரிமானக் கோளாறு, மலச்சிக்கல், வாயுத் தொல்லை, நெஞ்சு எரிச்சல் உள்ளிட்ட பாதிப்புகளை சந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுகிறோம். இதனை சரி செய்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள தினமும் மூலிகை பானம் அருந்துவது நல்லது.

தேவையான பொருட்கள்:-

*கொத்தமல்லி

*சீரகம்

*மிளகு

*கறிவேப்பிலை

*சோம்பு

செய்முறை:-

அடுப்பில் ஒரு வாணலி வைத்து அதில் கொத்தமல்லி விதையை போட்டு வறுத்து எடுத்து கொள்ளவும். பின்னர் ஒரு மிக்ஸி ஜார் எடுத்து அதில் வறுத்து வைத்துள்ள கொத்தமல்லி அதனுடன் 1/4 தேக்கரண்டி சீரகம், 2 மிளகு. 1/4 தேக்கரண்டி சோம்பு மற்றும் 6 கருவேப்பிலை இலைகள் போட்டு தண்ணீர் சேர்க்காமல் அரைக்க வேண்டும்.

பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி அரைத்து வைத்துள்ள பவுடரை கலந்து நன்கு கொதிக்க வைக்கவும்.

தண்ணீர் சுண்டி 1 கிளாஸாக வந்ததும் அதை ஒரு டம்ளருக்கு வடிகட்டி சில துளி தேன் சேர்த்து அருந்தலாம். இந்த மூலிகை பானம் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குவதோடு வயிறு தொடர்பான பிரச்சனையை சரி செய்ய உதவுகிறது.