மஞ்சள் காமாலை முதல் கிட்னி ஸ்டோன் வரை அனைத்து பிரச்சனைகளுக்கும் இந்த ஒரு செடி தான் தீர்வு!!
எந்தவித பராமரிப்பும் இல்லாமல் வளரும் மூலிகை தாவரம் கீழா நெல்லி.இதில் அதிகளவு பொட்டாசியம்,வைட்டமின் சி,இரும்புச்சத்து,மினரல்ஸ்,கார்போஹைட்ரேட் உள்ளிட்டவை நிறைந்து காணப்படுகிறது.இவை மஞ்சள் காமாலை,உடல் சூடு,பெண்களுக்கு வெள்ளைப்படுதல்,எலும்பு சம்மந்தமான பாதிப்பு ஆகியவற்றை குணப்படுத்தும் தன்மை கொண்டது.கீழா நெல்லியை அரைத்து சாறு எடுத்து பருகலாம்.இந்த இலையை அரைத்து தோசை மாவில் கலந்து தோசையாகவும் வார்த்து உண்ணலாம்.
கீழா நெல்லியின் மருத்துவ குணங்கள்:-
1.கீழாநெல்லி செடியின் இலையை சுத்தம் செய்து அரைத்து சிறு உருண்டைகளாக உருட்டி தினம் ஒன்று என்று சாப்பிட வேண்டும்.தொடர்ந்து 15 நாட்களுக்கு சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை கட்டுப்படும்.
2.கீழாநெல்லி இலையை அரைத்து சாறாக்கி மாதம் ஒரு முறை வெறும் வயிற்றில் குடித்துவந்தால் கல்லீரலில் சேர்ந்துள்ள நச்சுகள் வெளியேறி அவை சுத்தமாகும்.இந்த கீழா நெல்லி சாற்றை பெரியவர்கள் 30 மிலி மற்றும் சிறுவர்கள் 15 மிலி என்ற அளவில் எடுத்து கொள்வது நல்லது.
3.ஒரு பாத்திரம் எடுத்து அதில் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி கீழாநெல்லி இலையை சேர்த்து கொதிக்கவைக்க வேண்டும். நீர் ஒருபங்காக சுண்டியது அடுப்பை அணைத்து அவற்றை ஆற விட்டு குடிக்க வேண்டும்.இவ்வாறு தினமும் ஒரு டம்ளர் அளவு இதை குடித்துவந்தால் சிறுநீரக கற்கள் உடைந்து சிறுநீரகத்தில் வெளியேறும்.அதனோடு நச்சுகள் நீங்கி சிறுநீரகம் சிறப்பாக இயங்கும்.
4.தினமும் உணவு உட்கொள்வதற்கு முன் கீழாநெல்லி பொடி 1/2 தேக்கரண்டி அளவு உட்கொண்டு வந்தால் தீராத சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும்.சர்க்கரை நோயாளிகள் இதை தவிர்க்காமல் எடுத்துவந்தால் டயாலிஸிஸ் செய்வதிலிருந்து தப்பிக்கலாம்.
5.பெண்களுக்கு பெரும்பாடு என்னும் வெள்ளைப்படுதல் பாதிப்புக்கு கீழாநெல்லி சிறந்த தீர்வாகும்.இந்த கீழாநெல்லி இலையை சாறு பிழிந்து சம அளவு நீர் சேர்த்து குடித்து வந்தால் அந்த பாதிப்பு விரைவில் குணமாகும்.
6.உடல் உஷ்ணம்,வயிற்றுப்புண்,வயிற்றுக்கோளாறுகள் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு கீழாநெல்லி இலையை சுத்தம் செய்து அரைத்து விழுதாக்கி ஒரு டம்ளர் மோரில் கலந்து சிறிதளவு உப்பு சேர்த்து குடித்துவந்தால் வயிற்றுபுண்,வயிற்று கோளாறு உள்ளிட்ட பிரச்சனைகள் நீங்கும்.