மூட்டு வலி முதல் கணுக்கால் வீக்கம் வரை அனைத்திற்கும் ஒரே தீர்வு எருக்க இலை ஒத்தடம்!!

0
410
#image_title

மூட்டு வலி முதல் கணுக்கால் வீக்கம் வரை அனைத்திற்கும் ஒரே தீர்வு எருக்க இலை ஒத்தடம்!!

இன்றைய காலத்தில் பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை அனைவரும் மூட்டு வலியால் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த பிரச்சனை ஏற்பட்டு விட்டால் சிறு வேலையை செய்வதற்கு கூட தடிமனாக இருக்கும்.

மூட்டு வலி வரக் காரணங்கள்:-

*ஆரோக்கியமற்ற உணவு

*ஜவ்வு தேய்மானம் ஆகுதல்

*எலும்பு தேய்மானம் ஆகுதல்

*வயது மூப்பு

*வேலைப் பளு

*உடல் பருமன்

இதை ஆரம்ப நிலையில் கண்டறிந்து குணப்படுத்துவது மிகவும் முக்கியம் ஆகும். இதற்கு இயற்கை முறையில் எருக்க இலை வைத்து தீர்வு காண்பதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும்.

எருக்க இலை, பூ, பட்டை, வேர் என அனைத்திலும் மருத்துவ குணங்கள் நிறைந்து இருக்கிறது.
இந்த எருக்க இலை மூட்டு வலி, பாத வலி, கால் வலி, கணுக்கால் வலி உள்ளிட்டவைகளுக்கு சிறந்த நிவாரணியாக இருக்கிறது.

தேவையான பொருட்கள்:-

*எருக்க இலை – 5

*தண்ணீர் – 1 கப்

*காட்டன் துணி – 1

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 கப் நீர் ஊற்றி சூடுபடுத்தவும். பின்னர் 5 முதல் 6 எருக்க இலையை கிள்ளி போட்டு நிறம் மாறும் வரை கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.

பின்னர் ஒரு காட்டன் துணியை அந்த சசூடு நீரில் போட்டு நினைத்து பிழிந்து கொள்ளவும்.

பின்னர் இந்த துணியை மூட்டுகளை மேல் மெதுவாக அழுத்தம் கொடுக்காமல் வைத்து எடுக்கவும். இவ்வாறு சில நிமிடங்கள் செய்யவும். மூட்டு மட்டும் அல்லாமல் குதி கால், பாதம் உள்ளிட்ட இடங்களிலும் ஒத்தடம் கொடுப்பதினால் மூட்டு வலி, கணுக்கால் வீக்கம், காலில் நீர் கோர்த்தல் உள்ளிட்ட பிரச்சனைகளும் நீங்கும்.

Previous articleவீண் செலவு குறைந்து பண வரவு அதிகரிக்க வேண்டுமா? அப்போ இதை கடைபிடித்து பாருங்கள்!!
Next articleமுடி உதிர்வு மற்றும் பொடுகு பிரச்சனை ஒரே வாரத்தில் சரியாக இந்த ஒரு ஹேர் பேக்கை பயன்படுத்துங்கள்!!