பெரிய மனுஷன்ப்பா… தன் சாதனையை முறியடித்த கோலிக்கு வாழ்த்து சொன்ன ஜெயவர்த்தனே

0
72

பெரிய மனுஷன்ப்பா… தன் சாதனையை முறியடித்த கோலிக்கு வாழ்த்து சொன்ன ஜெயவர்த்தனே

நேற்றைய போட்டியில் இந்திய அணியின் மூத்த வீரர் கோலி சிறப்பான ஒரு இன்னிங்ஸை விளையாடி, இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தார். இந்த போட்டியில் அவர் 44 பந்துகளில் 64 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் அவர் உலகக்கோப்பை தொடர்களில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

ஜெயவர்த்தனேவின் முந்தைய 1016 ரன்கள் சேர்த்த சாதனையை அவர் முறியடித்துள்ளார். கோலி தற்போது 22 இன்னிங்ஸ்களில் 1017 ரன்கள் சேர்த்து முன்னிலையில் உள்ளார்.  இப்போது விளையாடும் வீரர்கள் ரோஹித் ஷர்மா 900+ ரன்களோடு கோலிக்கு அருகில் உள்ளார்.

தன் சாதனையை முறியடித்த கோலிக்கு வாழ்த்துகளைப் பகிர்ந்த ஜெயவர்த்தனே, கோலி தன் கேரியர் முழுவதும் ஒரு போர் வீரரை போல செயல்பட்டதாகக் கூறியுள்ளார். மேலும் அவர். “சாதனைகள் உடைக்கப்பட வேண்டும். என் சாதனையை யாரோ எப்போதோ முறியடிக்கப் போகிறார்கள், விராட் அது நீங்கள் தான். புத்திசாலித்தனமான வீரருக்கு வாழ்த்துக்கள். நீங்கள் எப்போதும் ஒரு போர்வீரன். பார்ம் என்பது தற்காலிகமானது ஆனால் கிளாஸ் நிரந்தரமானது. நல்லது, நண்பா,” என வீடியோ வெளியிட்டு வாழ்த்தியுள்ளார்.

உலகக்கோப்பைக்கு முன்பாக கடந்த சில ஆண்டுகளாக கோலி, ரன்கள் சேர்க்க முடியாமல் தவித்து வந்தார். ஆனால் ஆசியக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான சதத்துக்குப் பிறகு அவரின் பழைய ஆட்டம் மீண்டும் தொடங்கியுள்ளது. அது இந்திய அணிக்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது.