வாயுத் தொல்லை? உடலிலுள்ள கெட்ட வாயுக்கள் 5 நிமிடத்தில் நீங்க இதை 1 கிளாஸ் பருகுங்கள்!!

Photo of author

By Divya

வாயுத் தொல்லை? உடலிலுள்ள கெட்ட வாயுக்கள் 5 நிமிடத்தில் நீங்க இதை 1 கிளாஸ் பருகுங்கள்!!

ஆரோக்கியமற்ற உணவு முறை பழக்கத்தால் நம்மில் பலர் வாயுத் தொல்லையால் அவதிப்பட்டு வருகிறோம். நாம் உண்ணும் உணவு செரிக்காமல் மலசிக்கலாக உருவாகிறது. இதனால் உடலில் அதிகப்படியான கெட்ட வாய்க்குள் உருவாகி நம்மை பெரிதளவில் பாதித்து விடுகிறது.

வாயுத் தொல்லை ஏற்படக் காரணம்:-

மலச்சிக்கல், செரிமானக் கோளாறு, துரித உணவு.

இந்த வாயுத் தொல்லையை சரி செய்ய பூண்டு பற்களை பாலில் கலந்து பருகுதல் அவசியம் ஆகும். பூண்டில் கால்சியம், காப்பர், மெக்னிசியம், வைட்டமின் சி, வைட்டமின் பி6 உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. அதேபோல் பாலில் அதிகளவு கால்சியம், மக்னீசியம், புரதம் நிறைந்து இருக்கிறது.

தேவையான பொருட்கள்:-

*பூண்டு

*பால்

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 கிளாஸ் பால் ஊற்றவும். பின்னர் 1 பல் பூண்டை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி பாலில் சேர்த்து கொதிக்க விடவும். 1 கிளாஸ் பால் 3/4 கிளாஸ் என்று வந்ததும் அடுப்பை அணைத்து விடவும். இந்த பாலை ஒரு கிளாஸில் ஊற்றி பருகவும்.

இந்த பூண்டு பாலை தினமும் வெறும் வயிற்றில் பருகினால் உடலுக்கு அதிகளவு நன்மைகள் கிடைக்கும். இதில் சுவைக்காக சர்க்கரை, வெல்லம் என்று எந்த இனிப்பு பொருளும் சேர்க்கக் கூடாது. வாயுத் தொல்லை இருப்பவர்களுக்கு பூண்டு பால் சிறந்த தீர்வாக இருக்கும்.