Gas trouble? இதை சரி செய்ய 1 கிளாஸ் மோரில் இந்த பொருளை சேர்த்து பருகுங்கள்..!!

Photo of author

By Divya

Gas trouble? இதை சரி செய்ய 1 கிளாஸ் மோரில் இந்த பொருளை சேர்த்து பருகுங்கள்..!!

வாயுத் தொல்லையை சாதாரண பாதிப்பாக கருத வேண்டாம். இதனால் பல வித பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வாழ்க்கை முறை மாற்றம் மற்றும் உணவு முறை மாற்றத்தால் ஏற்பட்ட இந்த பாதிப்புக்கு இயற்கை வழிகளில் உரிய தீர்வு இருக்கிறது. இவற்றை செய்வதன் மூலம் உடலில் தேங்கி கிடந்த வாயுக்கள் அனைத்தும் உடலை விட்டு வெளியேறி விடும். இதனால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

வாயுத் தொல்லை ஏற்படக் காரணம்:-

*மலச்சிக்கல்

*செரிமானக் கோளாறு

*துரித உணவு

தேவையான பொருட்கள்:-

*மோர்

*ஓமம்

*துளசி

*இஞ்சி

*சீரகம்

*பெருஞ்சீரகம்

செய்முறை:-

முதலில் 1 கைப்பிடி அளவு துளசியை தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து கொள்ளவும்.

இதை ஒரு அம்மிக்கல்லில் போட்டு விழுது போல் அரைத்து கொள்ள வேண்டும். பின்னர் அதன் சாற்றை ஒரு பவுலில் பிழிந்து கொள்ளவும்.

அடுத்து இஞ்சி சிறு துண்டு எடுத்து அதன் தோலை நீக்கி கொள்ளவும். பிறகு அதை ஒரு அம்மிக்கல்லில் போட்டு விழுது போல் அரைத்து அதன் சாற்றை ஏற்கனவே எடுத்து வைத்துள்ள துளசி சாற்றுடன் கலக்கவும்.

பிறகு அடுப்பில் ஒரு வாணலி வைத்து அதில் 1/4 தேக்கரண்டி ஓமம், 1/4 தேக்கரண்டி சீரகம், 1/4 தேக்கரண்டி பெருஞ்சீரகம் சேர்த்து மிதமான தீயில் வறுத்து பொடித்துக் கொள்ளவும்.

அடுத்து 1 கிளாஸ் மோர் எடுத்துக் கொள்ளவும். அதில் துளசி + இஞ்சி சாறை சேர்த்து கலந்து விடவும். அடுத்து அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து நன்கு கலந்து பருகவும். இவ்வாறு குடித்த அடுத்த 5 நிமிடத்தில் உடலில் நீண்ட நாட்களாக தேங்கி கிடந்த கெட்ட வாயுக்கள் முழுவதும் வெளியேறி விடும். இதை அவ்வப்போது செய்து பருகி வந்தோம் என்றால் ஆயுசுக்கும் வாயு தொல்லை பிரச்சனை ஏற்படாது.