ஆண்மை தன்மை குறைபாடுகள் நீங்க! இதோ சில டிப்ஸ் உங்களுக்காக!

Photo of author

By Sakthi

ஆண்மை தன்மை குறைபாடுகள் நீங்க! இதோ சில டிப்ஸ் உங்களுக்காக!

ஆண்மை தன்மை தொடர்பான குறைபாடுகள் நீங்குவதற்கு ஆண்களுக்கு உதவும் சில அருமையான டிப்ஸ் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

பொதுவாக ஆண்களுக்கு உடலில் பல பிரச்சனைகள் ஏற்படும். அதில் முக்கியமான ஒன்று ஆண்மை தன்மை தொடர்பான பிரச்சனைகள் தான். இந்த பிரச்சனையை பொதுவாக ஆண்கள் யாரும் வெளியே சொல்வது இல்லை.

ஆண்மை தன்மை தொடர்பான பிரச்சனைகளை சரி செய்வதற்காக முறையான மருத்துவர்களை அணுகுவதை விட முறையற்ற மருந்துகளை வாங்கி சாப்பிடுவார்கள். அதனால் இருக்கும் பிரச்சனை இன்னும் அதிகமாகக் கூடும். எனவே ஆண்களுக்கு ஏற்படும் ஆண்மை தன்மை தொடர்பான பிரச்சனைகளை சரி. செய்ய இயற்கை முறையில் என்ன செய்வது என்பது குறித்த சில டிப்ஸ் பற்றி பார்க்கலாம்.

ஆண்மை தன்மை குறைபாடுகள் நீங்க உதவும் டிப்ஸ்…

* ஆண்மை குறைவு பிரச்சனையை சரி செய்ய மாதுளம் பழம் உதவு செய்யும். எனவே ஆண்கள் தினமும் இரவு மாதுளம் பழம் சாப்பிட்டு வந்தால் ஆண்மை குறைவு பிரச்சனை குணமாகும்.

* அதே போல ஆண்களின் மலட்டுத் தன்மையை சரி செய்ய உதவும் ஒரு பொருள் அரச மரத்தின் பழ விதை ஆகும். முதலில் அரச மரத்தின் பழ விதையை எடுத்து பொடியாக்கிக் கொள்ள வேண்டும். இந்த பொடியை சாப்பிட்டு வந்தால் மலட்டுத் தன்மை குணமாகும்.

* அதே போல ஆண்கள் அத்திப் பழத்தை தொடர்ந்து 41 நாட்கள் சாப்பிட்டு வந்தால் ஆண்மை சிறப்பாக இருக்கும்.

* ஆண்மை குறைவு பிரச்சனையை தீர்க்க ஆண்கள் தினமும் ஒரு முட்டை சாப்பிட்டு வரலாம்.

* ஆண்களின் விந்தணு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்றால் துத்தநாக சத்து நிறைந்த கடல் சிற்பியை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

* அதே போல ஜாதிக்காயை எடுத்து அதை பொடி செய்து அதை தேனில் குழைத்து தினமும் ஒரு வேளை சாப்பிட்டு வந்தால் ஆண்மை அதிகரிக்கும். அதே போல ஆண்களின் விந்தணு கெட்டியாக மாறும்