உங்கள் பிள்ளைகள் ஆரோக்கியமாக வளர இந்த ஹெல்த் மிக்ஸ் கஞ்சி கொடுங்கள்!!

0
216
#image_title

உங்கள் பிள்ளைகள் ஆரோக்கியமாக வளர இந்த ஹெல்த் மிக்ஸ் கஞ்சி கொடுங்கள்!!

குழந்தைகளுக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தால் பல்வேறு நோய் பாதிப்புகள்
ஏற்படும்.எனவே உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்க இந்த ஹெல்த் மிக்ஸ் பால் குடித்து வாருங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)சாமை – 1/4 கப்
2)வரகு – 1/4 கப்
3)வெள்ளை சோளம் – 1/4 கப்
4)பாதாம் பருப்பு – 1/4 கப்
5)முந்திரி பருப்பு – 1/4 கப்
6)வேர்க்கடலை – 1/4 கப்
7)ராகி – 1/4 கப்
8)பார்லி – 1/4 கப்

செய்முறை:-

ஒரு வெள்ளை காட்டன் துணியில் மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் போட்டு ஒரு நாள் முழுவதும் காயவைத்து எடுத்துக் கொள்ளவும்.

பின்னர் அடுப்பில் ஒரு கடாய் வைத்து காய வைத்த பொருட்கள் அனைத்தையும் போட்டு மிதமான தீயில் 2 முதல் 3 நிமிடங்களுக்கு வறுத்து ஆறவிட்டு கொள்ளவும்.

பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் ஆறவிட்ட பொருட்களை சேர்த்து மைய்ய அரைத்துக் கொள்ளவும்.இந்த பொடியை ஒரு டப்பாவில் போட்டு சேமித்துக் கொள்ளவும்.

பயன்படுத்தும் முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பால் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அரைத்த ஹெல்த் மிக்ஸ் பவுடர் 2 தேக்கரண்டி அளவு சேர்த்து ஒரு கரண்டி கொண்டு கலந்து விடவும்.

ஹெல்த் மிக்ஸ் பொடி பாலில் நன்கு கலந்து கொதித்து வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.

இந்த பாலை காலை,மாலை இருவேளை குடித்து வந்தால் குழந்தைகளுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.

Previous articleஉங்கள் தலையில் அதிகளவு முடி கொட்டுகிறதா? அப்போ இந்த ஆயிலை பயன்படுத்தி பலன் பெறுங்கள்!!
Next articleஉங்கள் தலையில் உள்ள வெள்ளை முடி நிரந்தரமாக கருமையாக இந்த ஹேர் டை யூஸ் பண்ணுங்க!!