இனி பிளாஸ்டிக் கவர்களுக்கு பதில் கண்ணாடி பாட்டில்கள்!! ஆவினின் அதிரடி பிளான் ஒர்க் ஒவுட் ஆகுமா??

0
153
Glass bottles instead of plastic covers!! Will Aavin's action plan work out??
Glass bottles instead of plastic covers!! Will Aavin's action plan work out??

இனி பிளாஸ்டிக் கவர்களுக்கு பதில் கண்ணாடி பாட்டில்கள்!! ஆவினின் அதிரடி பிளான் ஒர்க் ஒவுட் ஆகுமா??

பொதுமக்கள் அதிக அளவில் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்றுதான் இந்த பால் ஆகும். பொதுவாக தமிழக மக்கள் அனைவரும் பாக்கெட்டுகளில் விற்கப்படும் பாலையே அதிய அளவு பயன்படுத்தி வருகின்றனர்.

இவ்வாறு இருக்கும் பட்சத்தில் தமிழகத்தின் ஆவின் நிறுவனம் தற்பொழுது தினசரி நாள் ஒன்றிற்கு மற்றும் சுமார் 30 லிட்டர் பாலை விற்பனை செய்து வருகின்றது.

மேலும் இந்த பால் விற்பனையை அதிகபடுத்தும் விதமாக ஆவின் நிறுவனம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. ஆவின் நிறுவனத்தில் தயாரிக்கப்படும் பால் பச்சை ,நீளம் மற்றும் ஆரஞ்சு உள்ளிட்ட கவர்களில் பேக் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.

இவ்வாறு விற்பனை தரத்தை மேம்படுத்துவதற்காக தமிழக அரசானது சமீபத்தில் நைஸ் என்ற பெயரில் நீல நிறம் பாக்கெட்டை விற்பனை செய்து வருகின்றது.

சமீபத்தில் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்த தமிழக அரசின் அறிவிப்பை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கின் மூலம் ஆவின் நிறுவனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் பாலை பிளாஸ்டிக் இல்லாமல் விற்க முடியுமா என்பதை பற்றி பதில் அளிக்க வேண்டும் என்று நிறுவனத்திற்கு உத்தவிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கை நீதிபதி வைத்தியநாதன் மற்றும் ஆஷா ஆகியோர்கள் விசாரணை செய்ததது குறிப்பிடத்தக்கது. பதில் அளிக்க உள்ள ஆவின் நிறுவனம் பால் பாக்கேட்களுக்கு பதிலாக இனி பாலை பாட்டில்களில் விற்கலாமா என்று மக்கள் தரப்பில் கேட்டறியப்பட்டது என்றும் அது குறித்து எந்த வித ஆதவும் இல்லை என்றும் நிறுவனம் தெரிவித்தது.

ஆவின் நிறுவனத்தின்  உரைக்கு பதில் அளித்த நீதிமன்ற நீதிபதிகள் மது பானங்களை பாட்டில்களில் விற்கும் போது பாலை பாடில்லில் விற்க முடியாதா என்று கேள்வி எழுப்பியது.

இந்த நிலையில் தற்பொழுது ஆவின் நிறுவனம் பால்களை பாட்டிலில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.அந்த வகையில் பாட்டில்களை 10 ரூபாய் கணக்கு வச்சு திரும்ப வாங்கி கொள்ளலாம் என்று திட்டமிட்டு வருகின்றது.

இது தொடர்பான அறிக்கையை சமர்பிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் நீலகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் முதற் கட்டமாக பிளாஸ்டிக் கவர்களுக்கு பதில் கண்ணாடி பாட்டில்களில் விற்பனை செய்வதை பற்றி கருத்து கேட்கப்பட்டு வருகின்றது.

Previous articleகூடுதல் விற்பனைக்கு மது பாட்டில்களை விற்ற ஊழியர்கள்!! சம்பவம் தொடர்பான வீடியோ வைரல்!!
Next articleதெலுங்கானா மாநிலத்தில் பெய்து வரும் கனமழை… அபாய அளவை தாண்டி பாயும் கோதாவரி ஆறு!!