வரலாறு காணாத உச்சத்தில் விலையேறிய தங்கம்!! அதிர்ச்சியில் பொதுமக்கள்!!
தங்கம் விலையானது வரலாறு காணாத அளவில் உச்சத்தில் ஏறியுள்ளது.
தங்கத்தை விரும்பாத பெண்கள் இந்த பூமியில் இல்லை எனலாம். அதிலும் குறிப்பாக இந்திய பெண்கள் தங்கத்தை தங்கள் உடலின் ஒரு அங்கமாகவே அணிந்து வருகின்றனர். அவரவர் வசதிக்கேற்ப கூடவோ, குறைவாகவோ தங்க நகைகளை அணிவது வழக்கம்.
அதிலும் குறிப்பாக தமிழகத்தில் அனைத்து சுப காரியங்களிலும் தங்கம் முக்கிய முக்கியமான ஒன்றாகும். ஆனால் தற்போதைய காலகட்டங்களில் தங்கம் வாங்குவது என்பது கொஞ்சம் சிரமமான ஒன்றுதான். அதிலும் ஏழை மக்கள் தங்கத்தை கனவில் கூட நினைத்து பார்க்க முடியாத அளவு தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.
தங்கம் விலை இந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கிய போது இருந்தே ஒருநாள் அதிகளவு உயர்வதும், மறுநாள் சிறிது குறைவதுமாக, மக்களுக்கு போக்கு காட்டி வந்தது. இவ்வாறான விலையிலேயே விற்பனை செய்யப்பட்டு வந்த தங்கம் இன்று ஒரே நாளில் அதிகளவு அதிகரித்து வரலாறு காணாத உச்சபட்ச விலையை எட்டி உள்ளது.
இன்று சென்னையில் ஆபரண தங்கம் ஒரு சவரனுக்கு ரூ. 720 அதிகரித்து ஒரு சவரன் ரூ 46, 960 க்கும், அதேபோல கிராமுக்கு ரூ. 90 உயர்ந்து, ஒரு கிராம் 5870 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கத்தின் விலை தான் இப்படி என்றால் வெள்ளியின் விலையும் ஏறுமுகமாகவே உள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 70 காசு அதிகரித்து ஒரு கிராம் ரூ.82.20க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கத்தின் இந்த அதிரடி விலை உயர்வால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். மேலும் இந்த விலை ஏற்றத்தால் வசதியானவர்களை விட ஏழை எளிய மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். என்று தான் தங்கம் விலை குறையுமோ! என்று எதிர்பார்த்து காத்துள்ளனர். நிபுணர்கள் தற்போதைய கூற்றுப்படி தங்கம் விலையில் இன்னும் 2 மாதங்களுக்கு இதே சூழ்நிலையே நிலவும் என தெரிவித்துள்ளனர்.