மக்களுக்கு குட் நியூஸ்.. இந்த பொங்கலுக்கு ரூ.2000 கன்பார்ம்..!!

Photo of author

By Divya

மக்களுக்கு குட் நியூஸ்.. இந்த பொங்கலுக்கு ரூ.2000 கன்பார்ம்..!!

Divya

மக்களுக்கு குட் நியூஸ்.. இந்த பொங்கலுக்கு ரூ.2000 கன்பார்ம்..!!

ஒவ்வொரு ஆண்டும் நியாயவிலை கடைகள் மூலம் பொங்கல் பண்டிகைக்கு பொருட்களாகவோ, பணமாகவோ மக்களுக்கு தமிழக அரசு பரிசுப் பொருட்கள் வழங்கி வருகிறது. அந்த வகையில் வருகின்ற 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கொண்டாடவுள்ள பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேசன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000 வழங்கப்படுவது குறித்து தமிழக அரசு தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.

அதுமட்டும் இன்றி மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 ஒவ்வொரு மாதத்தின் 15 ஆம் தேதி அன்று வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அதற்கு முன்னதாக அதாவது ஜனவரி 14 ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட இருப்பதால் ஜனவரி 12, 13 ஆகிய தேதிகளில் ரேசன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகை ரூ.1000 மற்றும் மற்றும் மகளிர் உரிமை தொகை ரூ.1000 என்று மொத்தம் ரூ.2000 ரூபாயை அவரவர் வங்கி கணக்கில் செலுத்துவது குறித்து தமிழக அரசு தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறது என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.