இருதய நோயை குணமாக்கும் நெல்லிக்காய் + பூண்டு.. எவ்வாறு பயன்படுத்துவது?
நம் இந்தியாவில் இருதய நோய் பாதிப்பால் பெரும்பாலானோர் அவதியடைந்து வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் வாழ்க்கை முறை மாற்றம்… வேலை செய்யும் இடத்தில் ஏற்படும் மன அழுத்தம், கோபம், உயர் இரத்த அழுத்தம் போன்ற காரணங்களால் இருதயத்தில் வலி, அடைப்பு உள்ளிட்ட உயிருக்கு ஆபத்தான பாதிப்புகள் ஏற்படுகிறது. இதை வீட்டு வைத்தியம் மூலம் குணப்படுத்திக் கொள்வது நல்லது.
1)பெரு நெல்லிக்காய்
2)பூண்டு
3)செம்பருத்தி
ஒரு பாத்திரத்தில் ஒரு செம்பருத்தி பூவின் இதழை போட்டு 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும். அடுத்து அதில் ஒரு பல் இடித்த பூண்டு மற்றும் ஒரு நெல்லிக்காயை நறுக்கி சேர்க்கவும்.
இதை அடுப்பில் வைத்து கொதிக்க விட்டு ஒரு கிளாஸிற்கு வடிகட்டி குடித்து வந்தால் இருதய பிரச்சனை சரியாகும்.
1)எலுமிச்சை சாறு
2)சுக்கு
3)மிளகு
4)தேன்
ஒரு கிண்ணத்தில் ஒரு எலுமிச்சம் பழத்தின் சாறு, ஒரு தேக்கரண்டி சுக்கு தூள், 1/2 தேக்கரண்டி மிளகு தூள் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
அடுத்து அதில் சிறிது தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் இருதய அடைப்பு சரியாகும்.
1)பூண்டு
2)சீரகம்
3)சுக்கு
அடுப்பில் பாத்திரம் வைத்து அதில் 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றி 1/4 தேக்கரண்டி சுக்கு தூள், 1/4 தேக்கரண்டி சீரகம் மற்றும் 1 பல் பூண்டு சேர்த்து காய்ச்சி வடிகட்டி குடித்தால் இருதய அடைப்பு நீங்கும்.