பல நோய்களை விரட்டும் நெல்லிக்கனி!!! இதன் மற்ற நன்மைகள் என்னென்ன!!?

0
35
#image_title

பல நோய்களை விரட்டும் நெல்லிக்கனி!!! இதன் மற்ற நன்மைகள் என்னென்ன!!?

கனிகளில் ஆயுளை நீட்டிக்கும் கனியாக இருக்கும் நெல்லிக்கனியின் நன்மைகள் பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.

கனிகளில் சிறந்த கனி நெல்லிக்கனி ஆகும். இந்த நெல்லிக்கனியின் நன்மைகள் குறித்து முன்பே அறிந்த தமிழர்கள் தினமும் சாப்பிட்டு வந்தனர். இதற்கு மருத்துவத்தில் ஆரோக்கிய கனி என்று பெயரே உள்ளது.

தினமும் ஒரு நெல்லிக்காயை அது மலை நெல்லிக் காயோ அல்லது முழு நெல்லிக்காயோ எதாவது ஒரு நெல்லிக்காயை சாப்பிட்டு வந்தால் அவர்களின் ஆயுட்காலம் கூடும். நெல்லிக்காயில் வைட்டமின் சி, ஆன்டி ஆக்சிடன்ட் சத்துக்கள் அதிகளவில் உள்ளன. இதனால் நம் உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நெல்லிக்காய் உதவி செய்கின்றது. இதன். மற்ற நன்மைகள் என்ன என்பதை பற்றி பார்க்கலாம்.

நெல்லிக்காயின் மற்ற நன்மைகள்…

* முதுமையை தள்ளிப்போட வேண்டும் என்று நினைக்கும் நபர்கள் அனைவரும் நெல்லிக்காயை சாப்பிட்டு வரலாம்.

* நெல்லிக்காயில் சோடியம், பொட்டாசியம் ஆகிய சத்துக்கள்சரியான அளவில் இருப்பதால் மாரடைப்பு போன்ற இதய நோய்கள் வராமல் தடுக்க நெல்லிக்காய் உதவி செய்கின்றது. இதய நோய் ஏற்படக்கூடாது என்று நினைப்பவர்கள் அனைவரும் நெல்லிக்காயை சாப்பிட்டு வரலாம். மேலும் இதய நெய் பாதிப்பு இருப்பவர்களும் நெல்லிக்காயை சாப்பிட்டு வரலாம். இதய நோய்க்கு நல்ல மருந்தாக நெல்லிக்காய் இருக்கின்றது.

* சர்க்கரை நோய் இருப்பவர்கள் அனைவரும் தொடர்ந்து நெல்லிக்காயை சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோயின் வீரியம் குறைகின்றது.

* நெல்லிக்காய் குழந்தைகளுக்கு கெடுக்க வேண்டிய சிறந்த மருந்தாக இருக்கின்றது. நெல்லிக்காயை குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் இளம் வயதிலேயே குழந்தைகளுக்கு ஏற்படும் காசநோயை தடுத்து குழந்தைகள் ஆரோக்கியமாக வளர உதவி செய்கின்றது.

* அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பதில் நெல்லிக்காய் பெரும் பங்கு வகிக்கின்றது.

* சருமத்தின் பளபளப்பிற்கும் நெல்லிக்காயை மருந்தாக பயன்படுத்தலாம்.

* முடி வளர்ச்சிக்கும் நெல்லிக்காய் சிறந்த மருந்தாக பயன்படுகிறது.

* உடல் சூட்டை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தொடர்ந்து நெல்லிக்காயை சாப்பிட்டு வரலாம். நல்லதொரு தீர்வு கிடைக்கும்.

* அம்மை நோய், நிமோனியா நோய் போன்ற நோய்களுக்கு எதிராக நெல்லிக்காய் செயல்படுகின்றது. மேலும் பாக்டீரியா, வைரஸ், பூஞ்சைக் ஆகியவற்றிற்கும் ஒரே எதிரி நெல்லிக்காய் தான்.

* நெல்லிக்காய் சாப்பிடுபவர்களுக்கு சளி பிடிக்கும் என்று ஒரு கூற்று உள்ளது. இது வந்து டார்டாரிக் அமிலசத்து உள்ள அருநெல்லி என்று அழைக்கப்படும் சிறிய நெல்லிக்காயை சாப்பிடுபவர்களுக்கு தான் சளி பிடிக்கும். மலை நெல்லி அல்லது பெரிய நெல்லிக்காயை சாப்பிடுபவர்களுக்கு சளி பிடிக்காது.

* நெல்லிக்காயை எந்த வடிவத்தில் சாப்பிட்டாலும் அதில் உள்ள மருத்துவ குணம் மாறாது. அதாவது ஊறுகாய், சமைத்து சாப்பிடுவது, காய்ந்த நிலையில் சாப்பிடுவது அல்லது ஜூஸ் தயார் செய்து குடிப்பது என்று எந்த வகையிலும் நெல்லிக்காயை சாப்பிடலாம்.

* மேலும் தேன் நெல்லிக்காயை சாப்பிடுவதும் உடலுக்கு பல நன்மைகளை தரும்.