மழையில் நன்றாக நனைந்து சளி பிடித்துள்ளதா? அப்போ இதை 1 கிளாஸ் பருகினால் 5 நிமிடத்தில் தீர்வு கிடைத்து விடும்!!

0
53
#image_title

மழையில் நன்றாக நனைந்து சளி பிடித்துள்ளதா? அப்போ இதை 1 கிளாஸ் பருகினால் 5 நிமிடத்தில் தீர்வு கிடைத்து விடும்!!

கடந்த சில வாரங்களாக பருவமழை பெய்து வருகிறது. அதேபோல் மாறி வரும் பருவ நிலை மாற்றத்தால் பலர் சளி பாதிப்பால் அவதிப்பட்டு வருகிறோம். இந்த பாதிப்பு ஏற்பட்டு விட்டால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து உடல் சோர்வாக காணப்படும். இதை ஆரம்ப நிலையில் சரி செய்வது மிகவும் முக்கியம். இல்லையென்றால் சாதரண சளி, இருமல் காய்ச்சலாக மாறி விடும்.

சளி தொல்லையால் ஏற்படும் பாதிப்பு:-

*மூக்கு ஒழுகுதல்

*மூக்கடைப்பு

*மூச்சு விடுதலில் சிரமம்

*தொண்டை வலி

*தொண்டை புண்

*நீஞ்சு அனத்தம்

*தலைவலி

*வறட்டு இருமல்

*உடல் சோர்வு

தேவையான பொருட்கள்:-

*கடலை பருப்பு – 2 தேக்கரண்டி

*வர மிளகாய் – 8

*கொத்தமல்லி – 2 தேக்கரண்டி

*கரு மிளகு – 1 1/2 தேக்கரண்டி

*தேங்காய் துருவல் – 3 தேக்கரண்டி

*புளி – எலுமிச்சை அளவு

*தக்காளி – 4

*பச்சை மிளகாய் – 2

*கல் உப்பு – தேவையான அளவு

*கொத்தமல்லித்தழை – ஒரு கைப்பிடி

*பூண்டு – 8 பல்

*மஞ்சள் தூள் – சிறிதளவு

*எண்ணெய் – 1/2 தேக்கரண்டி

*கடுகு – 1/4 தேக்கரண்டி

*சீரகம் – 1/4 தேக்கரண்டி

*கறிவேப்பிலை – 1 கொத்து

*பெருங்காயத்தூள் – 1/4 தேக்கரண்டி

செய்முறை:-

அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் 2 தேக்கரண்டி கடலை பருப்பு, 6 வர மிளகாய், 2 தேக்கரண்டி கொத்தமல்லி, 1 1/2 தேக்கரண்டி கரு மிளகு, 3 தேக்கரண்டி தேங்காய் துருவல் சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுத்துக்கொள்ளவும். பின்னர் அடுப்பை அணைத்து நன்கு ஆற விடவும்.

பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் ஆறவைத்துள்ள பொருட்களை சேர்த்து பொடித்துக் கொள்ளவும்.

அடுத்து ஒரு பாத்திரத்தில் எலுமிச்சை அளவு புளி சேர்த்து தண்ணீர் ஊற்றி ஊற விடவும். அவை நன்கு ஊறி வந்ததும் புளிக்கரைசலை ஒரு பாத்திரத்திற்கு வடிகட்டி கொள்ளவும். பின்னர் அதில் 4 தக்காளி பழத்தை கைகளால் பிழிந்து விடவும்.

பிறகு உப்பு, மஞ்சள் தூள், மல்லித்தழை மற்றும் இடித்த பூண்டு சேர்த்து கலக்கி விடவும். பிறகு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கரைத்து வைக்கவும்.

அடுத்து அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1/2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றவும். அவை சூடானதும் 1/4 தேக்கரண்டி கடுகு, 1/4 தேக்கரண்டி சீரகம் சேர்த்து பொரிய விடவும். பின்னர் 2 வர மிளகாய், 1 கொத்து கருவேப்பிலை மற்றும் 1/4 தேக்கரண்டி பெருங்காயத் தூள் சேர்க்கவும்.

பின்னர் கரைத்து வைத்துள்ள பூண்டு கரைசலை அதில் சேர்க்கவும். அடுத்து அரைத்து வைத்துள்ள பொடியை அதில் சேர்த்து கலந்து விடவும். ரசம் 1 கொதி வந்ததும் அடுப்பை அணைத்து விடவும். இதை சாதத்தில் சேர்த்து சாப்பிட்டாலும் சரி ஒரு கிளாஸில் ஊற்றி பருகினாலும் சரி எப்படி சாப்பிட்டாலும் உடலில் உள்ள சளி முழுவதும் கரைந்து மூக்கின் வழியாக வந்து விடும்.