காலத்திற்கும் உதவும் பாட்டி வைத்தியம்!! இதை செய்தால் மருத்துவ செலவு இனி இல்லை!!
1)காய்ச்சல்
ஒரு கைப்பிடி அளவு துளசியை ஒரு கப் நீரில் போட்டு காய்ச்சி குடித்தால் காய்ச்சல் சில தினங்களில் குணமாகும்.
2)சளி,இருமல்
ஒரு துண்டு சுக்கை இடித்து ஒரு கிளாஸ் நீரில் போட்டு காய்ச்சி தேன் கலந்து குடித்தால் சளி,இருமல் குணமாகும்.
3)மங்கு
வேப்பிலையை அரைத்து மங்கு மீது பூசி வந்தால் அவை சில தினங்களில் மறைந்து விடும்.
4)குடற்புண்
ஒரு கப் பப்பாளி இலையை அரைத்து சாறு எடுத்து பருகி வந்தால் குடற்புண் விரைவில் ஆறும்.
5)அல்சர்
ஒரு கிளாஸ் மோரில் 1/4 தேக்கரண்டி வேப்பம் பூ பொடி சேர்த்து பருகி வந்தால் அல்சர் முழுமையாக குணமாகும்.
6)பைல்ஸ்
காலையில் வெறும் வயிற்றில் இரண்டு பச்சை வெங்காயத்தை சாப்பிட்டு வந்தால் பைல்ஸ் முழுமையாக குணமாகும்.
7)வண்டு கடி
வேப்பிலை மற்றும் மஞ்சளை அரைத்து வண்டு கடித்த இடத்தில் பூசினால் அவை விரைவில் குணமாகும்.
8)மலச்சிக்கல்
ஒரு கிளாஸ் சூடான நீரில் சில துளி விளக்கெண்ணெய் சேர்த்து குடித்தால் மலச்சிக்கல் முழுமையாக சரியாகும்.
9)நகசுத்தி
ஒரு பல் பூண்டை இடித்து நல்லெண்ணெயில் போட்டு காய்ச்சி நக சுத்தி மீது தடவினால் அவை சில தினங்களில் குணமாகும்.