அஜீரணக் கோளாறை அசால்ட்டாக குணமாக்கும் பாட்டி வைத்தியம்!
எளிதில் செரிக்காத உணவை உட்கொண்டால் அஜீரணக் கோளாறு, மலச்சிக்கல், புளித்த ஏப்பம், நெஞ்செரிச்சல் உள்ளிட்ட பல பாதிப்புகள் ஏற்படும்.
இதில் அஜீர்ணக் கோளாறு முக்கிய பாதிப்பாக இருக்கின்றது. உண்ட உணவு செரிக்க வில்லை என்றால் உடல் ஆரோக்கியம் கெட்டு விடும். இந்த அஜீரணக் கோளாறை இயற்கை முறையில் குணப்படுத்துக் கொள்வது நல்லது.
*பார்லி அரிசி
100 கிராம் அளவு பார்லி அரிசி எடுத்து கிண்ணத்தில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஊற விடவும். அரிசி நன்கு ஊறி வந்த பின்னர் தண்ணீரை ஒரு கிளாஸுக்கு வடிகட்டி பருகவும்.
பார்லி அரிசியில் கஞ்சி செய்து குடிக்கவும். இவ்வாறு வாரத்திற்கு ஒருமுறை செய்து வந்தால் அஜீரணக் கோளாறு நீங்கும்.
பார்லி அரிசியில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் நிறைந்து இருக்கிறது. இவை உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது. செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
*சோடா உப்பு
*தூள் உப்பு
*சர்க்கரை
*எலுமிச்சம் பழ சாறு
*தண்ணீர்
ஒரு டம்ளரில் 1 ஸ்பூன் சர்க்கரை, சிறிது தூள் உப்பு, சிட்டிகை அளவு சோடா உப்பு, பாதி எலுமிச்சையின் சாறு சேர்த்து கொள்ளவும். அடுத்து அதில் தண்ணீர் ஊற்றி கலந்து குடிக்கவும். இவ்வாறு செய்தால் அஜீரணக் கோளாறு சரியாகும்.