மாதவிடாயை இயற்கையான முறையில் தள்ளி போட உதவும் பாட்டி வைத்தியம்!! 100% பலன் உண்டு பெண்களே!!
வயது வந்த பெண்களுக்கு 28 நாட்களுக்கு ஒருமுறை மாதவிடாய் சுழற்சி ஏற்படுவது வழக்கம்.ஆனால் மாறி வரும் வாழ்க்கை சூழலால் உரிய நேரத்தில் மாதவிடாய் வருவதில்லை என்று பல பெண்கள் வருந்துகின்றனர்.
மாதவிடாய் தள்ளிப் போக தைராய்டு,உடல் பருமன்,நீர்க்கட்டி,கருப்பை பிரச்சனை என்று பல காரணங்கள் இருக்கிறது.
பெரும்பாலான பெண்கள் முறையற்ற மாதவிடாய் பிரச்சனையால் அவதிப்பட்டு வரும் நிலையில் ஒரு சில காரணங்களுக்காக மாதவிடாயை தள்ளி போட விரும்பும் பெண்களும் இருக்கின்றனர்.
கோயிலுக்கு செல்வதற்கு,சுப காரியங்களுக்காக மாதவிடாயை தள்ளி போட வேண்டும் என்று நினைக்கும் பெண்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பாட்டி வைத்தியத்தை பின்பற்றி வரவும்.
மாதவிடாய் ஏற்பட உள்ள 3 முதல் 5 நாட்களுக்கு முன் இதை செய்தால் நிச்சயம் எதிர்பார்க்கும் பலன் கிடைக்கும்.
எலுமிச்சை
மாதவிடாய் தள்ளி போக வைப்பதில் எலுமிச்சை முக்கிய பங்கு வகிக்கிறது.எலுமிச்சை சாற்றை ஒரு கிளாஸ் அளவு நீரில் சேர்த்து சர்க்கரை சேர்க்காமல் குடிக்க வேண்டும்.
வெந்தயம்
குளிர்ச்சி நிறைந்த வெந்தயத்தை நீரில் போட்டு ஊறவைத்து சாப்பிட்டு வந்தால்
மாதவிடாய் தள்ளி போகும்.
ஆப்பிள் சீடர் வினிகர்
ஒரு கிளாஸ் அளவு நீரில் 1 தேக்கரண்டி ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து குடித்து வந்தால் மாதவிடாய் தள்ளி போகும்.