பாட்டி சொன்ன வைத்தியம்.. மூட்டு வலியை குணமாக்கும் கற்பூர தைலம் – தயார் செய்வது எப்படி?

0
90
#image_title

பாட்டி சொன்ன வைத்தியம்.. மூட்டு வலியை குணமாக்கும் கற்பூர தைலம் – தயார் செய்வது எப்படி?

கடந்த 20 வருடங்களுக்கு முன்னர் நம் தாத்தா பாட்டிக்கு மட்டும் இருந்த மூட்டு வலி பிரச்சனை தற்பொழுது இளம் வயதினர், சிறுவர்கள் என்று அனைவருக்கும் நிகழ்ந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் உணவு முறை மாற்றம்.

மேலும் எதிர்பாராத விதமாக மூட்டுகளில் அடிபட்டாலோ, ஜவ்வு தேய்மானம் ஏற்பட்டாலோ மூட்டு வலி உண்டாகும். இந்த மூட்டுகளில் வலியை ஆரம்ப நிலையில் குணப்படுத்திக் கொள்வது நல்லது.

தேவையான பொருட்கள்:-

*தேங்காய் எண்ணெய்

*கற்பூரம்

*நல்லெண்ணெய்

*மஞ்சள்

செய்முறை:-

அடுப்பில் ஒரு வாணலி வைத்து அதில் 3 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய், 3 தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி மிதமான தீயில் சூடுபடுத்தவும். பின்னர் அதில் சிட்டிகை அளவு மஞ்சள் மற்றும் 2 கற்பூரம் சேர்த்து கரைத்து எண்ணெய் சூடேறியதும் அடுப்பை அணைக்கவும்.

அடுத்து மூட்டு பகுதியை வெந்நீர் கொண்டு சுத்தம் செய்து தயார் செய்து வைத்துள்ள கற்பூர தைலத்தை தேவையான அளவு எடுத்து மூட்டு பகுதிகளில் சேர்த்து மஜாஜ் செய்து கொள்ளவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தோம் என்றால் மூட்டு வலி பாதிப்பு சில தினங்களில் குணமாகும்.