பாட்டி வைத்தியம்.. குடலில் தேங்கி கிடக்கும் கெட்ட வாயுக்கள் 5 நிமிடத்தில் வெளியேற இவ்வாறு செய்யுங்கள்!!
இன்றைய நவீன உலகில் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை உணவு செரிக்காமை, உரிய நேரத்தில் மலத்தை கழிக்காமை, எண்ணெயில் பொரித்த உணவு அதிகளவு உண்ணுதல் உள்ளிட்ட காரணங்களால்ஏற்படும் வாயுத் தொல்லையால் அவதிப்பட்டு வருகிறோம்.
வாயுத் தொல்லைக்கான அறிகுறிகள்:-
*சாப்பிட்ட உடன் வயிறு வீக்கம்
*வயிறு உப்பசம்
*தொடர் ஏப்பம்
*ஆசன வாய் வழியாக தொடர்ந்து கெட்ட வாயு வெளியேறுதல்
வாயுத் தொல்லை ஏற்படக் காரணங்கள்:-
*எளிதில் செரிக்காத உணவு
*மலத்தை அடக்கி வைப்பது
*அதிக காரம் நிறைந்த உணவை உண்ணுதல்
*துரித உணவை அதிகளவில் எடுத்துக் கொள்ளுதல்
*மன அழுத்தம்
தேவையான பொருட்கள்:-
*மிளகு
*சீரகம்
*பூண்டு
*ஓமம்
*பெருங்காயம்
செய்முறை…
ஒரு உரலில் 5 மிளகு, 1/4 தேக்கரண்டி சீரகம் சேர்த்து இடித்தெடுத்துக் கொள்ளவும்.
பின்னர் 2 பூண்டு பற்களை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 1/4 டம்ளர் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.
பின்னர் அதில் இடித்த மிளகு, சீரகம், நறுக்கி வைத்துள்ள பூண்டு பற்கள், ஓமம் சிறிதளவு, பெருங்காயத் தூள் சிட்டிகை அளவு சேர்த்து நன்கு கொதிக்க விடவும். 1 14 கிளாஸ் தண்ணீர் சுண்டி 1 கிளாஸ் என்று வரும் வரை கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.
பின்னர் இதை 1 டம்ளருக்கு வடிகட்டி பருகவும். இவ்வாறு செய்தால் குடலில் தேங்கி கிடந்த நாள்பட்ட வாயுக்கள் அனைத்தும் வெளியேறி குடல் ஆரோக்கியமாக இருக்கும்.