குறட்டையில் இருந்து விடுபட வைக்கும் பாட்டி வைத்தியம்..!!

0
197
#image_title

குறட்டையில் இருந்து விடுபட வைக்கும் பாட்டி வைத்தியம்..!!

தூக்கத்தில் குறட்டை விடும் பழக்கம் உங்களில் பலருக்கு இருக்கும். அவ்வாறு சாதாரண விஷயம் அல்ல. உடலில் ஏற்படக் கூடிய நோய் பாதிப்புக்கான அறிகுறிகள் ஆகும். குறட்டை விட்டு தூங்குவது நிம்மதியான தூக்கம் என்று பலர் நினைத்து கொண்டிருக்கின்றனர். ஆனால் அது உண்மையில் நிம்மதியற்ற தூக்கத்திற்கான அறிகுறிகள் ஆகும்.

பெண்களை விட ஆண்களிடம் தான் குறட்டை விடும் பழக்கம் அதிகம் இருக்கிறது. இதனால் மாரடைப்பு நோய் பாதிப்பு கூட வர வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

குறட்டை ஏற்படக் காரணங்கள்:-

*உடல் பருமன்

*புகைப்பழக்கம்

*மது பழக்கம்

*சைனஸ் தொந்தரவு

*உள்நாக்கில் பிரச்சனை

*தாடை பகுதி உள்நோக்கி இருப்பது
குறட்டை பிரச்சனைக்கு வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு தீர்வு கண்டு விடலாம்.

தீர்வு 01:

தேவையான பொருட்கள்:-

*ஏலக்காய்

*தண்ணீர்

செய்முறை…

அரை தேக்கரண்டி ஏலக்காய் பொடியை வெதுவெதுப்பான நீரில் கலந்து இரவு தூங்கச் செல்வதற்கு முன் குடித்து வந்தோம் என்றால் குறட்டை பிரச்சனை நீங்கும்.

அதிக மருத்துவ குணம் கொண்ட இந்த ஏலக்காய் சுவாசப்பாதையில் உள்ள அடைப்புகளை நீக்கி குறட்டை பிரச்சனையில் இருந்து விடுபட வைக்கிறது.

தீர்வு 02:

தேவையான பொருட்கள்:-

*புதினா எண்ணெய்

*தண்ணீர்

செய்முறை…

ஒரு கிளாஸ் நீரில் 2 துளி புதினா எண்ணையை கலந்து இரவு தூங்கச் செல்வதற்கு முன் வாயை கொப்பளித்து விட்டு தூங்கச் செல்லுங்கள். இவ்வாறு செய்தால் குறட்டையைத் தவிர்க்கலாம்.

தீர்வு 03:

தேவையான பொருட்கள்:-

*தேன்

*தண்ணீர்

செய்முறை…

ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் 1 தேக்கரண்டி தேன் கலந்து இரவு தூங்கச் செல்வதற்கு முன் அருந்தினால் குறட்டை பிரச்சனை தீரும்.