மூக்கடைப்பை சட்டுன்னு விரட்ட செய்யும் பாட்டி வைத்தியம்..!

Photo of author

By Divya

மூக்கடைப்பை சட்டுன்னு விரட்ட செய்யும் பாட்டி வைத்தியம்..!

மூக்கில் அதிகப்படியான சளி அடைபட்டு இருந்தால் மூக்கடைப்பு பிரச்சனை ஏற்படும். இந்த மூக்கடைப்பு இரவு நேரத்தில் தான் தூங்க விடமால் படுத்தி எடுக்கும்.

மூச்சு விட முடியாமல் மிகவும் சிரமாக இருக்கும். இந்த பிரச்சனையில் இருந்து விடுபட சில மருந்துகளை மூக்கில் தடவினாலும் அவை சில மணி நேரத்திற்கு மட்டுமே தாக்கி பிடிக்கும்.

இந்த மூக்கடைப்பு பிரச்சனையில் இருந்து நிரந்தர விடுதலை பெற நினைப்பவர்கள் மாவிலை, ரோஜா இதழ் உள்ளிட்ட 5 பொருட்கள் பயன்படுத்தி கசாயம் செய்து குடிப்பது நல்லது.

கசாயம் செய்யத் தேவைப்படும் பொருட்கள்…

மாவிலை
பட்டை
பன்னீர் ரோஜா இதழ்
சுக்கு
வெங்காயம்

1)தேவைக்கேற்ப மாவிலை மற்றும் ரோஜா இதழ் எடுத்து உலர்த்தி தனித்தனியாக பொடியாக்கி கொள்ளவும்.

2)அதேபோல் பட்டை 2 துண்டு மற்றும் 1 துண்டு சுக்கை பொடித்து வைக்கவும்.

3)அடுத்து 1 சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி நறுக்கி கொள்ளவும்.

4)பிறகு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் சூடு படுத்தவும்.

5)தொடர்ந்து நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் சுக்கு பட்டை தூள் 1 ஸ்பூன் அளவு சேர்க்கவும்.

6)இவை கொதிக்கும் தருணத்தில் 1/2 ஸ்பூன் மாவிலை பொடி மற்றும் 1/2 ஸ்பூன் ரோஜா இதழ் பொடி சேர்த்து கொதிக்க வைத்து ஒரு கிளாஸுக்கு வடிகட்டி பருகவும்.