வயிற்றில் கேஸ் சேர்வதை தடுக்க மற்றும் தேங்கி கிடக்கும் கேஸ் வெளியேற பாட்டி வைத்தியம்..!!

Photo of author

By Divya

வயிற்றில் கேஸ் சேர்வதை தடுக்க மற்றும் தேங்கி கிடக்கும் கேஸ் வெளியேற பாட்டி வைத்தியம்..!!

இன்றைய காலகட்டத்தில் மக்கள் அதிகம் சந்திக்க கூடிய பிரச்சனைகளில் ஒன்று வாயுத் தொல்லை. இதற்கு முக்கிய காரணம் உணவு பழக்கவழக்கம். இவை ஒரு பெரிய பிரச்சனை இல்லையென்றாலும் இதனால் அவதிப்படும் மக்கள் ஏராளம் என்பது தான் நிதர்சனம்.

வாயுத் தொல்லை வர காரணம்:-

அதிக எண்ணெய் நிறைந்த உணவு, சர்க்கரை நிறைந்த உணவு, துரித உணவு, பால் அதிகளவு குடிப்பது, கோதுமை கலந்த உணவு அதிகளவில் சாப்பிடுவது உள்ளிட்ட காரணங்களால் வாயுத் தொல்லை ஏற்படுகிறது.

வாயுத் தொல்லை அறிகுறிகள்:-

சாப்பிட்டு முடித்ததும் ஏப்பம் வருதல், சிறிதளவு சாப்பிட்டால் கூட ஆசன வாய் வழியாக வாயு வெளியேறுதல், வயிறு உப்பசம், வயிறு வீக்கம், மந்த நிலை, மூச்சு பிடிப்பு உள்ளிட்டவைகள் வாயுத் தொல்லைக்கான அறிகுறிகள் ஆகும்.

வாயுத் தொல்லை நீங்க வீட்டு வைத்தியம்:-

தேவையான பொருட்கள்:-

*சோம்பு

*ஏலக்காய்

*சீரகம்

செய்முறை…

மேலே குறிப்பிட்டுள்ள இந்த மூன்று பொருட்களையும் சம அளவு எடுத்து லேசாக வறுத்து பொடி செய்து கொள்ளவும்.

பின்னர் பாத்திரத்தில் 1 கிளாஸ் அளவு நீர் ஊற்றி அரைத்த பொடியை சேர்த்து கொதிக்க விட்டு வடிகட்டி பருகினால் வாயுத் தொல்லை நீங்கும்.

வாயுத் தொல்லை நீங்க வேறு சில வழிகள்:-

1)தினமும் காலையில் 1 கீற்று பப்பாளி பழம் சாப்பிட்டால் வாயுத் தொல்லை பாதிப்பு நீங்கும்.

2)காலையில் வெறும் வயிற்றில் சீமை சாமந்தி பூ டீ செய்து குடித்து வந்தால் வாயுத் தொல்லை பாதிப்பு நீங்கும்.

3)தினமும் இரவு 1 வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் வாயுத் தொல்லை பாதிப்பு குணமாகும்.

4)தினமும் 1 கிளாஸ் தேங்காய் பால் சாப்பிட்டு வந்தால் வாயுத் தொல்லை நீங்கும்.