பாட்டி வைத்தியம்: இப்படி செய்தால் 5 நிமிடத்தில் காது வலி குணமாகி விடும்..!!

0
281
#image_title

பாட்டி வைத்தியம்: இப்படி செய்தால் 5 நிமிடத்தில் காது வலி குணமாகி விடும்..!!

காது வலியால் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் அவதியடைந்து வருகின்றனர். இந்த காது வலி பெரும்பாலும் அழற்சி, தொற்று, இரைச்சல் உள்ளிட்ட காரணங்களால் ஏற்படுகிறது.

இந்த காது வலியை குணமாக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கத்தை பின்பற்றுங்கள். நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.

தேவையான பொருட்கள்:-

*தேங்காய் எண்ணெய்

*நல்லெண்ணெய்

*பெருங்காயம்

செய்முறை…

அடுப்பில் ஒரு கரண்டி வைத்து அதில் 1 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் ஊற்றி கொள்ளவும். பின்னர் அதில் சிறிதளவு பெருங்காயம் சேர்த்து நன்கு கலந்து விடவும். இதை ஒரு கிண்ணத்திற்கு வடிகட்டி கொள்ளவும். அடுத்து இதில் சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்து நன்கு கலந்து விடவும்.

இந்த எண்ணெயில் 2 அல்லது 3 துளியை வலி இருக்கும் காதில் விட்டால் அவை சில மணி நேரத்தில் குணமாகும்.

மற்றொரு தீர்வு:-

தேவையான பொருட்கள்:-

*நல்லெண்ணெய்

*பூண்டு

*உப்பு

செய்முறை…

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். பின்னர் அதில் 4 பல் தோல் நீக்கிய பூண்டை சேர்த்துக் கொள்ளவும். அடுத்து அதில் சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்து வேக விடவும்.

பூண்டு நன்கு வெந்ததும் இதை ஒரு உரலில் போட்டு நசுக்கி கொள்ளவும். அதனுடன் சிறிதளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.

இந்த கலவையை ஒரு காட்டன் துணியில் தடவி காது வலி இருக்கும் இடத்தில் வைக்கவும். இவ்வாறு செய்தால் சில நிமிடங்களில் காது வலி குணமாகும்.

Previous articleதெரிந்து கொள்ள வேண்டியவை.. குலதெய்வ வழிபாடு செய்வது எப்படி..? குலதெய்வ வழிபாட்டின் மகிமை என்ன..?
Next articleமலச்சிக்கல் பிரச்சனையை தடுக்கும் அன்னாசி பழம்! இதன் மற்ற நன்மைகள் என்ன?