பாட்டி வைத்தியம்.. மூட்டு வலி நொடியில் நீங்க “மிளகு + டீ தூள்” போதும்!!

Photo of author

By Divya

பாட்டி வைத்தியம்.. மூட்டு வலி நொடியில் நீங்க “மிளகு + டீ தூள்” போதும்!!

முந்தைய காலத்தில் பெரியவர்கள் மட்டும் தான் மூட்டு வலி பிரச்சனைகளை சந்தித்து வந்தனர். ஆனால் தற்பொழுது இளம் வயதினருக்கும் மூட்டு வலி பாதிப்பு ஏற்படுவது அதிகரித்து வருகின்றது. நாளடைவில் மூட்டு வலியுடன் சேர்த்து எலும்பு தேய்மானமும் ஏற்பட ஆரம்பித்து விடுகிறது.

மூட்டு வலி ஏற்படக் காரணங்கள்:-

*உடல் பருமன்

*முதுமை

*எலும்புகளில் அடிபடுதல்

தேவையான பொருட்கள்:-

*பப்பாளி விதை

*மிளகுத் தூள்

*டீ தூள்

*தேன்

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். பின்னர் அதில் 1 தேக்கரண்டி அளவு பப்பாளி விதை சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும்.

அதில் சிறிதளவு டீ தூள் சேர்த்து கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும். அடுத்து அதில் 2 சிட்டிகை அளவு மிளகு தூள் சேர்த்து கலக்கி ஒரு டம்ளருக்கு வடிகட்டி கொள்ளவும்.

பிறகு அதில் 1 தேக்கரண்டி அளவு தேன் சேர்த்து கலக்கி பருகவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தோம் என்றால் முழங்கால் மூட்டு வலி விரைவில் சரியாகி விடும்.

மற்றொரு தீர்வு:-

அடுப்பில் பாத்திரம் வைத்து அதில் 1 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும்.

பிறகு அதில் 1 ஏலக்காய் மற்றும் சோம்பு 1 தேக்கரண்டி சேர்த்து கொதிக்க விடவும். 5 நிமிடங்களுக்கு பின்னர் அடுப்பை அணைத்து விடவும். பின்னர் அதனை ஒரு டம்ளருக்கு வடிகட்டி அதில் 1 தேக்கரண்டி வெல்லம் சேர்த்து கலக்கி பருகவும். இவ்வாறு தொடர்ந்து செய்தால் மூட்டு வலி பாதிப்பு சில நாட்களில் சரியாகிவிடும்.