ஆன்மீகத்தில் நாம் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் இவை!!

0
43
#image_title

ஆன்மீகத்தில் நாம் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் இவை!!

1)எந்த வீட்டில் சாப்பாட்டுக்கு ஊறுகாய் இருக்கிறதோ அந்த வீட்டில் தரித்திரம் இருக்காது.

2)பெண்களின் மாதவிடாய் முடிந்து 5 நாள் கழித்து வீட்டை அலசி விட்டு பிறகு விளக்கு போடுங்கள். அதுதான் நமக்கு நல்லது நம் வீட்டுக்கு நல்லது.

3)சாமிக்கும் படைக்கும் போது அல்லது விரதம் இருக்கும் போது அன்னம், உப்பு, நெய் இவைகளை கைகளால் பரிமாறக் கூடாது. ஏனென்றால் அப்படி பரிமாறினால் அது மாமிசத்திற்கு சமம்.

4)வீட்டில் மாலையில் விளக்கு ஏற்றிய பிறகு தரையை தடவி தாயம் விளையாடுவது, பேன் பார்த்தல், நகம் வெட்டுதல் போன்ற செயல்களை செய்யக் கூடாது.

5)எந்த ஒரு நல்ல விசேஷத்திற்கும் நீங்கள் தேங்காய் உடைக்கும் போது உங்கள் குலதெய்வத்துக்கு முதலில் உடைத்த பிறகு தான் மற்ற தெய்வத்திற்கு உடைக்க வேண்டும்.

6)திருமாங்கல்யம் மாற்றும் போது காலை நேரத்தில் மட்டும் தான் மாற்ற வேண்டும். மாலைப் பொழுது மதிய வெயிலில் மாற்றக் கூடாது.

7)மாலை போட்டு கோயிலுக்கு செல்லும் போது ஒரு பத்து பேருக்கு வீட்டில் அன்னதானம் செய்துவிட்டு போவது நல்லது.

8)இரவில் தூங்கும் முன்பு நம் வீட்டில் நிறை செம்பு தண்ணீர் வீட்டு முன் வைத்து விட்டு தூங்க வேண்டும். ஏனென்றால் நம் முன்னோர்களான பாட்டி, தாத்தா வந்து போவார்கள் என்று சொல்வார்கள். நம் பாட்டி, தாத்தா சாமிக்கு சமமாக வணங்குவோம்.

9)கோயில் வாசலில் செருப்பு தொலைந்தால் வருத்தப்படாதீர்கள். தொலைந்ததற்காக அடுத்தவர்கள் செருப்பையும் போட்டு வர வேண்டாம். கோயிலில் நம் செருப்பு தொலைந்தால் நம்முடைய கஷ்டங்கள் தீரும்.