நெஞ்சு சளி, வறட்டு இருமல் பாதிப்பை ஒரே நாளில் குணமாக்க உதவும் பாட்டி வைத்தியம்!!
1)அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 3 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்தவும். பின்னர் அதில் 10 முதல் 15 துளசி இலைகளை போட்டு வறுத்தெடுத்துக் கொள்ளவும். இதை முதுகு, நெஞ்சு, கால் பாதங்களில் தடவி வர நெஞ்சு சளி, வறட்டு இருமல் பாதிப்பு சரியாகும்.
2)சூடான பாலில் சிறிதளவு மஞ்சள் தூள் மற்றும் மிளகு சேர்த்து சாப்பிட்டால் சளி, இருமல், நெஞ்சு சளி உள்ளிட்டவை சரியாகும்.
3)உலர் திராட்சை பழங்களை அரைத்து தேன் கலந்து அடுப்பில் வைத்து சூடாக்கி சாப்பிட்டால் வறட்டு இருமல், சளி தொல்லை அகலும்.
4)கடுக்காய், அதிமதுரம், கடுக்காய் மற்றும் மிளகு உள்ளிட்டவற்றை சம அளவு எடுத்து வறுத்து பொடி செய்து தேன் கலந்து சாப்பிட்டால் வறட்டு இருமல், நெஞ்சு சளி பாதிப்பு உடனடியாக குணமாகும்.
5)சூடான தேங்காய் எண்ணெயில் சிறிதளவு கற்பூரத்தை சேர்த்து கலக்கி தலையில் தேய்ப்பதன் மூலம் இருமல், சளி குணமாகும்.
7)துளசி, ஓமவல்லி, வெற்றிலை ஆகியவற்றை சிறிதளவு எடுத்து இடித்து சாறு பிழிந்து பருகினால் சளி பாதிப்பு நீங்கும்.
8)ஓமம், சீரகம், மிளகு, பூண்டு, இஞ்சி, ஓமவல்லி உள்ளிட்டவற்றை 1 1/4 கிளாஸ் நீரில் போட்டு கொதிக்க விட்டு வடிகட்டி தேன் கலந்து பருகினால் இருமல், சாதாரண சளி, நெஞ்சு சளி உள்ளிட்ட பாதிப்புகள் சரியாகும்.
9)வெற்றிலை, சுக்கு, மிளகு உள்ளிட்டவற்றை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி தேன் கலந்து பருகினால் சளி தொல்லை நீங்கும்.