இஞ்சியின் மகத்தான பயன்கள்.. அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று!!

Photo of author

By Divya

இஞ்சியின் மகத்தான பயன்கள்.. அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று!!

நம்மில் பெரும்பாலானோருக்கு இஞ்சி வாசனை மிகவும் பிடிக்கும்.இந்த இஞ்சி நம் அன்றாட சமையலில் முக்கிய இடத்தை பிடிக்கிறது.இந்த இஞ்சியில் பொட்டாசியம்,விட்டமின் ஏ,சி,பி6,பி12 மற்றும் கால்சியம்,சோடியம்,இரும்புச்சத்து உள்ளிட்டவை அதிகளவில் அடங்கி இருக்கிறது.இதை உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் உடலுக்கு ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும்.

இஞ்சியின் அற்புத நன்மைகள்:-

*இஞ்சி செரிமான பாதிப்புக்கு சிறந்த தீர்வாக இருக்கிறது.அடுப்பில் பாத்திரம் வைத்து அதில் 1 1/2 கிளாஸ் தண்ணீர் ஊற்றவும்.பின்னர் அதில் 1 துண்டு இடித்த இஞ்சியை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.1 1/2 கிளாஸ் தண்ணீர் 1 கிளாஸ் என்று வந்த பின் அடுப்பை அணைக்கவும்.பின்னர் இதை வடிகட்டி தேன் கலந்து குடித்தோம் என்றால் செரிமான பாதிப்பு குறையும்.

*பசி உணர்வு அதிகரிக்க ஒரு துண்டு இஞ்சி எடுத்து இடித்து ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து காலையில் குடித்து வர பசி உணர்வு அதிகரிக்கும்.அதேபோல் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவையும் கட்டுக்குள் வைத்திருக்கும்.

*இருமல்,ஆஸ்துமா,இரைப்பு குணமாக இஞ்சி சாறு,வெங்காயச்சாறு,எலுமிச்சை சாறு சம அளவு எடுத்து கலந்து பருகி வர அந்த பாதிப்பு முழுவதுமாக சரியாகும்.

*மலச்சிக்கல்,மார்பு வலி இருக்கும் நபர்கள் பால் + இஞ்சி சாறை கொதிக்க வைத்து பருகினால் உடனடி தீர்வு கிடைக்கும்.

*வாயு தொல்லை நீங்க இஞ்சி மற்றும் துளசி சம அளவு எடுத்து அரைத்து அதன் சாற்றை பிழிந்து பருகினால் அந்த பாதிப்பு முழுமையாக சரியாகி விடும்.

*சளி தொல்லை நீங்க கொதிக்கும் நீரில் சிறிதளவு இடித்த இஞ்சி +எலுமிச்சை சாறு சேர்த்து வடிகட்டி சிறிதளவு தேன் சேர்த்து பருக வேண்டும்.

*செரிமான பாதிப்பு இருப்பவர்கள் இஞ்சியில் சாறு பிழிந்து ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து பருகினால் உடனடி தீர்வு கிடைக்கும்.

*அதேபோல் வயிறு குமட்டல்,வாந்தி உள்ளிட்டவை ஏற்படும் பொழுது இஞ்சியில் சாறு பிழிந்து ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து பருகினால் உடனடி தீர்வு கிடைக்கும்.

*முறையற்ற மாதவிடாய் பிரச்சனையை சந்தித்து வரும் பெண்கள் கொதிக்கும் நீரில் சிறு துண்டு இடித்த இஞ்சி + நாட்டு சர்க்கரை சேர்த்து கொதிக்க விட்டு வடிகட்டி பருகினால் உடனடி தீர்வு கிடைக்கும்.