இந்த விதைகளை அரைத்து பாலில் கலந்து குடித்தால் சர்க்கரை நோய் நொடியில் கட்டுப்படும்!!
சர்க்கரை நோய் என்பது அனைவரும் சந்திக்க கூடிய பிரச்சனை ஆகும்.இந்த நோய் பாதிப்பு ஆரோக்கியமற்ற உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறை பழக்கத்தால் ஏற்படுகிறது.இந்த பாதிப்பை இயற்கை வழியில் எளிதில் கட்டுப்படுத்தலாம்.
1)ஆளி விதை – 25 கிராம்
2)சியா விதை – 25 கிராம்
3)வெந்தய விதை – 25 கிராம்
4)நாவல் விதை – 50 கிராம்
செய்முறை:-
இந்த விதைகள் அனைத்தையும் வாணலியில் போட்டு லேசான தீயில் வாசனை வரும் வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
பின்னர் ஆறவிட்டு ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.இந்த பொடியை ஒரு ஈரமில்லாத டப்பாவில் போட்டு சேமித்துக் கொள்ளவும்.
பிறகு அடுப்பில் ஒரு வாணலி வைத்து ஒரு கிளாஸ் சுத்தமான பசும் பால் சேர்த்து சூடு படுத்தவும்.பின்னர் அதில் அரைத்த விதை பொடி ஒரு ஸ்பூன் அளவு சேர்த்து சில நிமிடங்கள் கொதிக்க வைத்து குடிக்கவும்.
இந்த பால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
சியா விதையில் அதிகளவு ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள்,மக்னீசியம்,நார்சத்துகள் நிறைந்து இருக்கிறது.ஆளி விதையில் அதிகளவு நார்ச்சத்துக்கள் நிறைந்து இருக்கிறது.வெந்தய விதை மற்றும் நாவல் விதையிலும் அதிகளவு நார்ச்சத்துக்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருக்கிறது.இவை இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள உதவுகிறது.