தக்காளியுடன் இந்த பொருளை அரைத்து குடித்தால் மூட்டு வலி தோள்பட்டை வலி முடக்கு வாத தொல்லை இனி இல்லை!!

Photo of author

By Divya

தக்காளியுடன் இந்த பொருளை அரைத்து குடித்தால் மூட்டு வலி தோள்பட்டை வலி முடக்கு வாத தொல்லை இனி இல்லை!!

வயது முதுமையில் ஏற்படும் கை கால் வலி,மூட்டு வலி,தோள்பட்டை வலி மற்றும் முடக்கு வாதம் குணமாக சிகிச்சை இல்லாத ஒரு எளிய தீர்வு கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது.

தேவையான பொருட்கள்:-

1)தக்காளி – ஒன்று(நறுக்கியது)

2)பெரிய வெங்காயம் – பாதி(நறுக்கியது)

3)சீரகம் – ஒரு ஸ்பூன்

4)பூண்டு – 4 பற்கள்

5)மிளகு – 1/4 ஸ்பூன்

5)வாத நாராயணன் பொடி – ஒரு ஸ்பூன்

5)முடக்கத்தான் பொடி – ஒரு ஸ்பூன்

செய்முறை:-

ஒரு மிக்ஸி ஜாரில் நறுக்கிய தக்காளி ஒன்று,நறுக்கிய பெரிய வெங்காயம்,தோல் நீக்கிய பூண்டு,கருப்பு மிளகு மற்றும் சீரகம் சேர்த்து மைய்ய அரைத்துக் கொள்ளவும்.

அதன் பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 1/2 கப் தண்ணீர் ஊற்றவும்.அதன் பின்னர் அரைத்த விழுது சேர்த்து கலந்து விடவும்.

பின்னர் அதில் ஒரு ஸ்பூன் வாத நாராயணன் இலை பொடி மற்றும் ஒரு ஸ்பூன் முடக்கத்தான் இலை பொடி சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும்.

இதை தினமும் இரவு தூங்கச் செல்வதற்கு முன்னர் குடித்து வந்தால் மூட்டு வலி,பக்க வாதம்,கை கால் வலி முழுமையாக குணமாகும்.