கடவுள் கொடுத்த அருமருந்து கொய்யா கனி!! இத்தனை நன்மைகள் இந்த பழத்தில் இருக்கிறதா?

Photo of author

By Divya

கடவுள் கொடுத்த அருமருந்து கொய்யா கனி!! இத்தனை நன்மைகள் இந்த பழத்தில் இருக்கிறதா?

Divya

கடவுள் கொடுத்த அருமருந்து கொய்யா கனி!! இத்தனை நன்மைகள் இந்த பழத்தில் இருக்கிறதா?

நாம் உண்ணும் அனைத்து பழங்களும் ஊட்டச்சத்து நிறைந்தவை தான்.ஒவ்வொரு பழங்களும் ஒவ்வொரு வித நன்மையை நம் உடலுக்கு வழங்குகிறது.அதிலும் நம் மண்ணில் வளரும் பழங்கள் என்றால் இன்னும் சிறப்பு.இதில் வெள்ளை கொய்யா,சிவப்பு கொய்யா என்று இரு வகைகள் இருக்கிறது.

பொதுவாக நம் ஊர் பழங்கள் என்றால் ஒரு தனி சுவை இருக்கும்.அதோடு விலை மலிவாகவும் இருக்கும்.விலை மலிவாக கிடைக்கிறது என்பதினால் அதில் சத்துக்கள் இல்லை என்று நினைத்து விடக்கூடாது.விலை அதிகம் கொடுத்து வாங்கி உண்ணும் ஆப்பிள் பழத்தை காட்டிலும் நம் ஊரில் விலையும் கொய்யா பழத்தில் பொட்டாசியம்,கார்போஹைட்ரேட்,நார்ச்சத்து மற்றும் புரதம்,வைட்டமின் சி,பி6,கால்சியம், இரும்பு, மக்னீசியம் போன்ற எண்ணற்ற சத்துக்கள் நிறைந்து இருக்கிறது.இந்த கொய்யா பழத்தில் மட்டும் அல்ல அதன் இலை,பூ,வேர்,பட்டை என்று அனைத்திலும் சத்துக்கள் நிறைந்துள்ளது.

கொய்யா பழத்தின் நன்மைகள்:-

*தினமும் ஒரு கொய்யா பழம் சாப்பிடுவதன் மூலம் செரிமானக்கோளாறு,மலச்சிக்கல் பாதிப்பு உள்ளிட்ட’பாதிப்புகள் நீங்கும்.கொய்யா பழத்தில் அதிகளவு நார்ச்சத்து நிறைந்து இருப்பதால் இவை மலச்சிக்கல் பாதிப்பு உரிய தீர்வாக இருக்கும்.அதுமட்டும் இன்றி வயிறு கோளாறுக்கும் இவை நல்ல தீர்வாக இருக்கும்.

*அதேபோல் தினமும் ஒரு கொய்யா கனி சாப்பிடுவதன் மூலம் வாயுத்தொல்லை மற்றும் அசிடிட்டி பாதிப்பு நீங்கும்.ஏனென்றால் கொய்யா பழத்தில் அமில தன்மை அதிகம் இருக்கிறது.

*கொய்யாவில் அதிகளவு வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்து இருப்பதால் இவற்றை உண்ணுவதன் மூலம் சருமம் பொலிவாகவும்,இளமையாகவும் இருக்கும்.

*இரத்த அழுத்த பிரச்சனை இருப்பவர்கள் தினமும் கொய்யா பழம் உண்டு வருவது நல்லது.இதில் அதிகளவு பொட்டசியச் சத்து இருப்பதால் அவை இரத்த ஓட்டத்தை சீராக்க உதவும்.

*நரம்புத்தளர்ச்சி பாதிப்பு இருப்பவர்கள் கொய்யா பழம் உண்பதை வழக்கமாகி கொள்ளுங்கள்.காரணம் இதில் அதிகளவு மெக்னீசியம் இருக்கிறது.அதேபோல் வைட்டமின் சி சத்துக்களும் கொய்யாப்பழத்தில் அதிகளவில் இருப்பதால் சளி பாதிப்பு நீங்கும்.

*நீரிழிவு பாதிப்பு இருப்பவர்கள்,குடல் புண் பாதிப்பால் அவதிப்படுபவர்கள் கொய்யா கனியை உண்டு வருவது நல்லது.