தீ விபத்து ஏற்பட்டுவிட்டதா? உடனடியாக செய்ய வேண்டிய முதலுதவிகள் என்னென்னு தெரியுமா?

0
88
#image_title

தீ விபத்து ஏற்பட்டுவிட்டதா? உடனடியாக செய்ய வேண்டிய முதலுதவிகள் என்னென்னு தெரியுமா?

சில நேரங்களில் நமக்கு எதிர்பாராத விதமாக வீட்டிலோ அல்லது வெளி இடங்களிலோ தீ விபத்து ஏற்பட்டு விடும். அந்த சமயத்தில் நாம் ரொம்ப எச்சரிக்கையாக முதலுதவி செய்ய வேண்டும்.

சரி தீ விபத்து ஏற்பட்டால் எப்படி முதலுதவி செய்ய வேண்டும் என்று பார்ப்போம் –

முதலில் தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் இறங்க வேண்டும். தீ விபத்து சிறியதாக இருந்தால் நீங்களே அதை அணைத்து விடலாம். அப்படி இல்லையென்றால் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

தீ விபத்தில் யாருக்காவது உடம்பில் தீக்காயம் ஏற்பட்டால் உடனடியாக அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.

எண்ணெய் அல்லது அமிலம் காரணமாக தீ விபத்து ஏற்பட்டால், மணலை உபயோகித்து நெருப்பை அணைக்க வேண்டும். மற்ற தீ விபத்துகளுக்கு நீரை ஊற்றினால் போதும்.

தீ விபத்தில் ஒருவருக்கு உடம்பில் தீ பற்றி எரிந்தால் அவரை கம்பளி அல்லது வேறு துணியால் சுற்ற வேண்டும். பின்னர் அவரை தரையில் போட்டு உருட்டி தீயை அணைக்க வேண்டும்.

ஒருவருக்கு ஆடையில் தீப்பற்றி கொண்டால் பயந்து ஓடக்கூடாது. அப்படி பயந்து ஓடினால் காற்றின் மூலம் தீ வேகமாக பரவ ஆரம்பிக்கும்.

தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் குளிர்ந்த தண்ணீரை ஊற்றலாம்.

ஒருவருக்கு தீக்காயம் ஏற்பட்டு விட்டால், அவர்களை வறட்சியாகவும் வைத்துக் கொள்ள வேண்டும்.

தீ காயம் ஏற்பட்ட இடத்தில் ஒரு துணி கொண்டு கட்டி பாதுகாக்க வேண்டும்.

தீக்காயத்தால் உடம்பில் ஒருவருக்கு கொப்புளங்கள் இருந்தால் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

தீ விபத்தில் ஒருவருக்கு காயம் ஏற்பட்ட இடத்தில் துணி ஒட்டிக் கொண்டிருந்தால் அதை அவசரப்பட்டு எடுக்க கூடாது.

தீ விபத்தால் பாதிக்கப்பட்டவருக்கு சிறிய தீக்காயங்கள் இருந்தால் பழச்சாறு அல்லது உப்பு மற்றும் சர்க்கரை கலந்த தண்ணீர் குடிக்க கொடுக்க வேண்டும்.

சூடான பாத்திரத்தை தொட்டாலோ, கொதிக்கும் எண்ணெய் தெறித்து விழுவதலோ ஏற்படும் சிறு புண்கள் மற்றும் கொப்புளங்களை கையினால் தேய்க்கக்கூடாது. நகத்தால் கிள்ளுதல் கூடாது.

தீக்காயங்கள் மேல் தேன், முட்டையின் வெள்ளைக் கரு மருந்தாக போடலாம். அப்படி செய்யும்போது, பாதிக்கப்பட்ட இடத்தில் ஏற்படும் எரிச்சலை குறைக்கும்.

கடுமையான தீக்காயங்கள் ஏற்பட்டால் அவர்கள் மேல் வாழை இலை பயன்படுத்தலாம். இதனால், வலி மற்றும் எரிச்சலை குறைக்கும்.