குழந்தைகளுக்கு ஆரோக்கியமான செர்லாக் பொடி – வீட்டு முறையில்..!
குழந்தைகளுக்கு ஆரோக்கியமான முறையில் சத்து பொடி அதாவது செர்லாக் பொடி தயாரிக்கும் முறை கீழே கொடுக்கப்பட்டு இருக்கின்றது.
செர்லாக் செய்ய தேவைப்படும் பொருட்கள்:-
1)துவரம் பருப்பு
2)பச்சைப் பயறு
3)உலர் பட்டாணி
4)கருப்பு சுண்டல்
5)சீரகம்
6)அரிசி
7)கருப்பு உளுந்து
செய்முறை…
ஒரு மாதத்திற்கு தேவையான செர்லாக் பொடி தயாரித்து வைத்துக் கொள்ளுங்கள்.
ஒரு கிண்ணத்தில் 1 ஸ்பூன் சீரகம், 25 கிராம் அரிசி, 15 கிராம் துவரம் பருப்பு, 15 கிராம் பச்சை பயறு, 15 கிராம் பாசி பருப்பு, 10 கிராம் கருப்பு சுண்டல் மற்றும் 10 கிராம் கருப்பு உளுந்து போட்டு தண்ணீர் ஊற்றி அலசவும்.
மூன்று முதல் 4 முறை நன்கு அலசி தண்ணீரை வடித்து விடவும். பிறகு ஒரு வெள்ளை காட்டன் துணியில் இந்த பொருட்கள் அனைத்தையும் போட்டு நிழலில் நன்கு காயவைத்து எடுத்துக் கொள்ளவும்.
பிறகு அடுப்பில் ஒரு கடாய் வைத்து காயவைத்த பொருட்களை சேர்த்து மிதமான தீயில் லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
இவை நன்கு ஆறியப் பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடியாக்கி கொள்ளவும். இந்த பொடியை ஒரு காற்றுப்புகாத டப்பாவில் போட்டு சேமித்து வைக்கவும்.
பயன்படுத்தும் முறை….
அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும். பிறகு அதில் அரைத்த செர்லாக் பொடி 2 ஸ்பூன் அளவு சேர்த்து நன்கு கலந்து விடவும்.
இதை ஆறவிட்டு குழந்தைகளுக்கு ஊட்டினால் அவர்களின் உடல் வளர்ச்சி நன்றாக இருக்கும்.