இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்க உதவும் ஹெல்தி மில்க்!
இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைந்தால் கை, கால்களில் வீக்கம், மயக்கம், உடல் சோர்வு உள்ளிட்டவை ஏற்படும்.
இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க ராகி, பேரிச்சம் பழம், பாதாம் பாருப்பு உள்ளிட்ட சில பொருட்களை அரைத்து குடித்து வரலாம்.
தேவையான பொருட்கள்:-
*ராகி – 1 1/2 தேக்கரண்டி
*பாதாம் பருப்பு – 10
*முந்திரி – 10
*உலர்ந்த அத்திப்பழம் – 5
*பேரிச்சம் பழம் – 5
*காய்ச்சிய பால் – 1 கப்
*தேன் – 2 தேக்கரண்டி
செய்முறை:-
ஒரு கிண்ணத்தில் 10 பாதாம் பருப்பு போட்டு தண்ணீர் ஊற்றி நன்கு ஊற விடவும். பிறகு தோல் நீக்கி வைத்துக் கொள்ளவும்.
அடுத்து அடுப்பில் பாத்திரம் வைத்து 1 1/2 தேக்கரண்டி ராகி மாவு போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கட்டிபடாமல் நன்கு கொதிக்க விடவும். பிறகு இதை நன்கு ஆற விட்டு ஒரு மிக்ஸி ஜாரில் சேர்க்கவும். அதன் பின்னர் தோல் நீக்கிய பாதாம் பருப்பு, முந்திரி பருப்பு, சேர்த்து மைய்ய அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
அதேபோல் உலர் அத்திப்பழம் மற்றும் பேரிச்சம் பழத்தை மிக்ஸி ஜாரில் போட்டு காய்ச்சிய பால் ஊற்றி மைய்ய அரைக்கவும். இதை அரைத்த ராகியில் சேர்த்து கலந்து விடவும். அதன் பின்னர் 2 தேக்கரண்டி தேன் சேர்த்து குடிக்கவும். இந்த பானம் குடிப்பதற்கு மிகவும் சுவையாக இருப்பதோடு இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கச் செய்கிறது.