உடல் எடையை அதிகரிக்க செய்யும் ஆரோக்கிய வழிகள்!

0
148
#image_title

உடல் எடையை அதிகரிக்க செய்யும் ஆரோக்கிய வழிகள்!

1)ஒரு கிளாஸ் சூடான பாலில் 2 ஸ்பூன் உலர் திராட்சை சேர்த்து 2 நிமிடங்களுக்கு ஊற விட்டு 1 ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்கும்.

2)வேர்க்கடலையை, ஊற வைத்த பாதாம், ஒரு செவ்வாழை பழம் ஆகியவற்றை அரைத்து குடித்து வந்தால் உடல் எடை அதிகரிக்கும்.

3)ஒரு கிளாஸ் சூடான பாலில் 1 ஸ்பூன் சதாவரி பொடி, 1 ஸ்பூன் ஓரிதழ் தாமரை பொடி சேர்த்து கலக்கி காலை நேரத்தில் உணவு உட்கொள்வதற்கு முன் பருகவும்.

4)ஒரு கிண்ணத்தில் 2 பாதாம் பருப்பு, 2 முந்திரி பாருப்பு, 5 உலர் திராட்சை, விதை நீக்கிய 2 பேரிச்சம் பழம் ஆகியவற்றை போட்டு தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து கொள்ளவும். பிறகு இதை மிக்ஸி ஜாரில் போட்டு 1 கிளாஸ் பால் ஊற்றி கூழ் போல் அரைத்து பருகவும்.

5)கருப்பு உளுந்தை ஊறவைத்து அரைத்து வெல்லம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்கும்.

6)சிவப்பு இறைச்சி சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்கும். பாலில் தேன் கலந்து குடித்து வந்தால் உடல் எடை அதிகரிக்கும்.

7)கருப்பு உளுந்து, எள், வேர்க்கடலை தேவையான அளவு எடுத்து வறுத்து அரைத்து கஞ்சி காய்ச்சி குடித்து வந்தால் உடல் எடை அதிகரிக்கும்.