நெஞ்செரிச்சல்? இதை உடனே சரி செய்ய உதவும் வீட்டு வைத்தியம்..!!
நவீன கால உணவுமுறை பழக்கத்தால் நெஞ்செரிச்சல் என்பது பெரும்பாலானோரை அவதியடைய செய்யும் பாதிப்பாக இருக்கிறது. இந்த நெஞ்சு எரிச்சல் பாதிப்பால் அல்சர், குடல் புண், வாய்ப்புண் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு ஆளாக நேரிடும்.
இந்த நெஞ்சு எரிச்சல் பாதிப்பை ஆரம்ப நிலையில் குணப்படுத்திக் கொள்வது மிகவும் முக்கியம் ஆகும். இதற்கு குளிர்ச்சி நிறைந்த பொருட்களை உட்கொள்வது நல்லது.
*வெந்தயம் குளிர்ச்சி நிறைந்த பொருள். இதை தண்ணீரில் ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் நெஞ்சு எரிச்சல் குணமாகும்.
*கற்றாழையில் ஜூஸ் செய்து பருகி வருவதன் மூலம் நெஞ்சு எரிச்சல் குணமாகும்.
*மஞ்சள் கடுகு செரிமானத்தை பராமரித்து நெஞ்சு எரிச்சல் வராமல் தடுக்க உதவுகிறது. எனவே மஞ்சள் கடுகை சமையலில் சேர்த்து கொள்வதன் மூலம் நெஞ்சு எரிச்சல் பாதிப்பை தடுக்க முடியும்.
*ஒரு கிளாஸ் தண்ணீரில் ஆப்பிள் சீடர் வினிகர் 1 ஸ்பூன், தேன் 1 ஸ்பூன் சேர்த்து கலந்து பருகி வருவதன் மூலம் நெஞ்சு எரிச்சல் குணமாகும்.
*ஒரு கிளாஸ் தண்ணீரில் 1 ஸ்பூன் சோம்பு சேர்த்து பருகி வருவதன் மூலம் நெஞ்சு எரிச்சல் குணமாகும்.
*ஓமம் நெஞ்சு எரிச்சல், வாயுத் தொல்லைக்கு சிறந்த தீர்வாக இருக்கிறது. இந்த ஓமத்தை ஒரு கிளாஸ் மோரில் கலந்து பருகினால் நெஞ்சு எரிச்சல் குணமாகும்.