கனமழை எதிரொலி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு! இந்த மூன்று பகுதிகளிலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!
கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வங்கக்கடலில் தென்கிழக்கு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது இரண்டு நாட்களில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலை கொண்டு புயலாக மாறியது.அந்த புயலிற்கு மாண்டஸ் என்று பெயர் வைக்கப்பட்டது.அந்த புயலின் காரணமாக தமிழகம்,புதுச்சேரி,காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்தது.
அதனை தொடரந்து கனமழையின் காரணமாக தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டனர்.மேலும் கடந்த ஜனவரி மாதம் முதல் வாரத்தில் தான் மழையின் தாக்கம் குறைந்தது.அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நேரடி வகுப்பு தொடங்கப்பட்டது.
மேலும் கடந்த ஐனவரி மாதம் 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.இந்நிலையில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.அதன் காரணமாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அந்த அறிவிப்பில் தமிழகத்தின் டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இன்று நாகப்பட்டினம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகின்றது.அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.அதனை தொடர்ந்து திருவாரூர் மாவட்டத்திலும் காலை முதலே மழை பெய்து வருகின்றது.அதனால் திருவாரூரில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.அதுமட்டுமின்றி மயிலாடுதுறை மாவட்டத்திலும் தொடர் மழை பெய்து வருவதின் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.